Advertisment

படங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மாஸ் ஹீரோ : பவன் கல்யாணுக்கு விஜய் சேதுபதி பாராட்டு

ஆந்திரா சட்டமன்றத் தேர்தல், மற்றும் 2 மக்களவைத் தொகுதிகள் என போட்டியிட்ட 21 இடங்களிலும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
Vijay Sethupathi Pawan Kalyan

தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்றது குறித்து விஜய் சேதுபதி கருத்து

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆந்திரா சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட 21 இடங்களிலும் வெற்றி வாகை சூடிய ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : Vijay Sethupathi: ‘Pawan Kalyan is a mass hero not just in films but in real life too’

தமிழ் மட்டுமல்லாமல, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, பிஸியான நடிகராக வலம் வரும் நிலையில், அவரது நடிப்பில் அடுத்து ஏஸ் மற்றும் மகாராஜா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. அதேபோல் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ட்ரெய்ன் படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஐதராபாத்தில் நடந்த மகாராஜா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய, விஜய் சேதுபதி,ஆந்திர சட்டமன்ற தேர்தல் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகள் என போட்டியிட்ட 21 இடங்களிலும் ஜனசேனா வெற்றி பெற்ற நிலையில, அக்கட்சியின் தலைவர் பவர் ஸ்டார்பவன் கல்யாணின் நேர்மை பற்றி விஜய் சேதுபதி வெகுவாக பேசியுள்ளார்.

சேதுபதி கூறுகையில், "சத்தியமாக அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் தெலுங்கு வட்டாரத்தைச் சேர்ந்த பல நண்பர்கள் சமூக ஊடகங்களில் அவரைப்பற்றய தகவல்களை பகிர்ந்து கொண்டனர், அதன் மூலம் நான் அவரைப் பற்றி அறிந்தேன். திரைப்படங்களில் மாஸ் ஹீரோ மட்டுமின்றி, ஒரு மனிதராகவும் தன்னை நிரூபித்தவர். எல்லாவற்றுக்கும் காரணம் அவரின் நிலைத்தன்மைதான்.

என்ன வம்பு என்று நான் மக்களிடம் கேட்டேன், அவர் உண்மையில் என்ன சாதித்தார் என்று சொன்னார்கள். அவரை பற்றிய விமர்சனங்கள் இருந்தபோதிலும், அவர் தனது பலத்தை நிரூபித்து காட்டியுள்ளார். மேலும் இளம் நடிகைகளுடன் நடிக்கும் ஹீரோக்கள் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, பதிலளித்தார்.

ஒரு காலத்தில் நடிகர்களுக்கு சகோதரி மற்றும் மகளாக நடித்த நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்கும் நட்சத்திரங்களைப் பற்றி கேட்டபோது,இதுபற்றி நான் ஏற்கனவே பேசிவிட்டேன். நான் 2021 இல் உப்பென்ன படத்தில் கிருத்தி ஷெட்டியுடன் நடித்தேன், பின்னர், ஒரு இயக்குனர் என்னிடம் மற்றொரு படத்திற்கு அவரை ஹீரோயினாக அணுகலாம் என்று கூறினார். உப்பென்ன படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் போது என்னை அப்பாவாகக் நினைத்துக்கொள் என்று அவரிடம் சொன்னதால், அவர் வேண்டாம் என்று சொன்னேன். எனவே, நான் அப்படி நடிக்க விரும்பவில்லை. இந்த மனிதர் என்னை அப்பாவாகக் நினைக்க சொன்னதால் அவருடன் நடிக்க விரும்பவில்லை என்று அவர் சொல்லிவிட்டால் என்ன செய்வது? தயவு செய்து இந்த மாதிரியான கேள்விகளை விட்டவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் மறைந்த ராமோஜி ராவுக்கு விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்தினார். ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தான் வளர்ந்த காலத்தில் புதுப்பேட்டையில் நடித்த காலக்கட்டங்களை நடிகர் நினைவு கூர்ந்தார். இந்த பிலிம் சிட்டியில், சேரி செட் முதல் பண்ணை வரை எல்லாவற்றையும் அவர் காட்டினார். ராமோஜி ராவ் சினிமாவுக்கு மகத்தான சேவை செய்திருக்கிறார்என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pawan Kalyan Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment