Advertisment

வடிவேல் பாலாஜி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி மட்டுமல்லாமல் வடிவேல் பாலாஜியுடன் பணியாற்றிய மேலும் சில மேடை கலைஞர்கள் இறுதி அஞ்சலியில் பங்கேற்றனர்.

author-image
WebDesk
Sep 11, 2020 13:07 IST
New Update
vadivel balaji

Vijay Sethupathi pays tribute to late comedian actor Vadivelu Balaji : சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைகள் முற்றிலுமாக செயல் இழந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Advertisment

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு அனைவரும் இறுதி அஞ்சலிகள் மற்றும் இரங்கல்களை ஆன்லைனில் தெரிவிக்க, நடிகர் விஜய் சேதுபதி இன்று அவரின் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளார்.

மேலும் படிக்க : உடல் நலக்குறைவால் சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்!

வடிவேல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி, பாலாஜியின் குடும்பத்தினருக்கு தேவையான பண உதவியையும் அளித்துள்ளார். இந்நிகழ்வு திரைத்துறை வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் விஜய் டிவியில், வடிவேல் பாலாஜியுடன் இணைந்து பணியாற்றிய ஒரு சில கலைஞர்களும் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

நடிகர் கார்த்தியின் இரங்கல் செய்தி

விஜய் டிவியில் இருந்து தன்னுடைய பயணத்தை துவங்கி வெள்ளித்திரையில் சிறந்த நடிகராக வலம் வரும் சிவ கார்த்திகேயன், வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் படிப்பு செலவை முழுமையாக ஏற்றுக் கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment