vijay sethupathi performance in vikram the audience reaction , உலக நாயகன் கமலுக்கு நிகரான நடிப்பை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Advertisment
தமிழ்நாடே எதிர்பார்த்த விக்ரம் படம் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. உலக நாயகன் கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா, காளிதாஸ் ஜெயராம் என்ற திரை நட்சத்திரங்களின் பட்டாலமே இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பொதுவாக கமல் திரைப்படம் என்றாலே அதில் அவருக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்ற பொதுப் பேச்சு நிலவும். ஆனால் இத்திரைப்படத்தில் மற்ற கதாநாயகர்களும் கலக்கி இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.
மாஸ்டர் திரைப்படத்தில் அட்டகாசமான வில்லனாக நடித்து கலக்கிய விஜய் சேதுபதி இத்திரைப்படத்திலும் கலக்கி இருக்கிறார். ஹாலிவுட் வில்லன்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்று ரசிகர்கள் கூறுவருகின்றனர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு நடிகை பூஜா தேவ்ரியா நடிப்பிற்கான சிறப்பு பயிற்சி அளித்துள்ளார். இதனால் விஜய் சேதுபதியின் நடை, நடிப்பின் வெளிப்பாடு தர மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். கமல்ஹாசனும் விஜய் சேதுபதியும் சண்டையிடும் காட்சியில் விஜய் சேதுபதி உச்சகட்டமாக நடித்திருக்கிறார் என்றும் கஞ்சா அடித்துவிட்டு கத்தியை அவர் எடுத்து கமலை தாக்கும் காட்சியில் விஜய் சேதுபதி உண்மையான வில்லனாகவே வாழ்ந்திருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
விஜய் சேதுபதி எல்லா திரைப்படங்களில் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்துவதாக அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதுவரை விஜய் சேதுபதியிடம் இருந்து இப்படி ஒரு நடிப்பு வெளியிப்பட்டது இல்லை என்றும் இத்திரைப்படம் மூலம் ஹாலிவுட் படங்களில் விஜய் சேதுபதி கால்பதிக்கும் வாய்ப்பை பெறுவார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
மலையாள திரைப்படமான ஜல்லிகட்டு, அங்கமாலி டைரீஸ் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரன் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் சேதுபதியை புது விதமாக காட்சிப்படுத்தியதில் இவரது பங்கும் அதிகமாக இருக்கிறது. மேலும் விஜய் சேதுபதியின் லுக்- புது விதமாக வந்திருப்பதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிகவும் உழைத்திருக்கிறார். மேலும் இது ஒரு கமல் படம் அல்ல என்றும் முழுக்க முழுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil