scorecardresearch

கமலஹாசனுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி

cinema news in tamil, vijay sethupathi play villian role in kamal’s vikram: கமலஹாசன் தற்போது நடிக்கவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இவர் ஏற்கனவே 1986 ஆம் ஆண்டில் விக்ரம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அத்திரைப்படம் காவல்துறை சம்பந்தமான திரைக்கதையை கொண்டது. ஆனால் தற்போது நடிக்கும் படம் த்ரில்லர் வகையை சார்ந்தது என்று படத்தின் போஸ்டரைப் பார்க்கும்போது தெரிகிறது. இத்திரைப்படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

கமலஹாசனுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி

கமலஹாசன் தற்போது நடிக்கவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இவர் ஏற்கனவே 1986 ஆம் ஆண்டில் விக்ரம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அத்திரைப்படம் காவல்துறை சம்பந்தமான திரைக்கதையை கொண்டது. ஆனால் தற்போது நடிக்கும் படம் த்ரில்லர் வகையை சார்ந்தது என்று படத்தின் போஸ்டரைப் பார்க்கும்போது தெரிகிறது.

இந்த திரைப்படத்தை ’மாநகரம்’, ‘கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின் தொடங்கவுள்ளது.

இத்திரைப்படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இத்திரைப்படத்தில் முன்னதாக நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிப்பதாக இருந்தது. தற்போது அவர் மாற்றப்பட்டு விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய் ஹீரோவாக நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அதற்கு முன்பாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார். இவர் இது போல் பல படங்களில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.

விஜய் சேதுபதி கமலஹாசனுடன் சேர்ந்து நடிக்க சில ஆண்டுகளாகவே விருப்பம் தெரிவித்து வந்தார். கடந்த வருடம் கமலஹாசன் திரை உலகில் 60 ஆண்டு கால பயணத்தை பாராட்டும் விதமாக ’உங்கள் நான்’ எனும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி இசை நிகழ்ச்சியாக இசைஞானி இளையராஜா அவர்களால் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். மேலும், அவர் அந்த நிகழ்ச்சியில் பேசும் போது கமலஹாசனுடன் தான் சேர்ந்து நடிக்க விரும்புவதாக தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார். இவர் ஏற்கனவே ‘இந்தியன்’ இரண்டாம் பாகத்தில் கமலுடன் நடிக்க விரும்பி இருந்தார். சில காரணங்கள் அவருக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது விக்ரம் திரைப்படம் மூலம் அவரது ஆசை நிறைவேற உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay sethupathi play villian role in kamal vikram