விவசாயத்தில் களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி !

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் சீதக்காதி திரைப்படத்தில் வயதான விவசாயியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

தமிழ் திரையுலகில் துணை நடிகராக அடி எடுத்து வைத்து, பிற்காலத்தில் ஹீரோவாக அவதரித்து மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் விஜய் சேதுபதி. பீட்ஸா, ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சூதுகவ்வும், நானும் ரவுடி தான், சேதுபதி மற்றும் விக்ரம் வேதா என பல வெற்றித் திரைப்படங்களில் கலக்கியிருக்கிறார்.

seethakathi, நடிகர் விஜய் சேதுபதி

சீதக்காதி படத்தில் நடிகர் விஜய் சேதுபதி

கதாப்பாத்திரங்கள் எதுவாயினும், கதையும் கதை உருவாகும் களத்திற்குமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டவர். அதன் விளைவாகவே அவரின் படங்களின் மேல் மக்கள் வைத்திருக்கும் ஆர்வம் சற்றும் குறையவில்லை.

விவசாயியாக நடிகர் விஜய் சேதுபதி :

மணிரத்தினம் இயக்கத்தின் விஜய் சேதுபதி நடித்திருக்கும் செக்க சிவந்த வானம் இம்மாதம் இறுதியில் வெளிவர உள்ளது. இந்நிலையில், அவர் நடித்து வரும் மற்றொரு படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பி, விஜய் சேதுபதி முதியவராக நடித்து வருகிறார். அவரின் தோற்றம் லேசாக இந்தியன் தாத்தா போல இருந்தாலும், இந்த கதையில் நிச்சயம் ஏதோ ஒரு பிரமிக்கக் கூடிய விஷயம் இருக்கும் என்பதி தெளிவாக வெளிபட்டது. அதன் படி விஜய் சேதுபதி வயதான விவசாயியாகவும், விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதியின் தோற்றம் அமையும் மேக் அப் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இதை தொடர்ந்து, இந்த படத்தின் வெளியீட்டிற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close