/indian-express-tamil/media/media_files/2025/09/15/tamil-biggboss-m-2025-09-15-07-40-22.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன், விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9-வது சீசன் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையின் முக்கிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 9-வது சீசன் குறித்த அப்டேட் கடந்த சில வாரங்களாக வெளியாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று, ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
அவரது தனித்துவமான பேச்சு மற்றும் ஈர்ப்பு இந்த நிகழ்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. அவர் மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்று ரசிகர்களிடையே பல வாரங்களாக இருந்த எதிர்பார்ப்பிற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனிக்கிழமை அன்று சேனலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்புடன், விஜய் சேதுபதி க்ரீம் நிற டெனிம் ஜாக்கெட் அணிந்திருக்கும் ஒரு புதிய போஸ்டரும் வெளியானது.
அதில், "பார்க்க பார்க்க தான் புரியும்... போக போக தான் தெரியும். பிக் பாஸ் தமிழ் சீசன் 9 அக்டோபர் 5 ஆம் தேதி முதல் பிரம்மாண்டமான துவக்கம்" என்று அந்த போஸ்டரில் குறிப்பிட்டிருந்தது. பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், மேலும் ஜியோசினிமா தளத்திலும் ஸ்ட்ரீம் செய்யப்படும். இதன் பிரம்மாண்ட துவக்க விழா அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும்
— Vijay Television (@vijaytelevision) September 13, 2025
Bigg Boss Tamil Season 9 | Grand Launch - அக்டோபர் 5 முதல்..😎 #BiggBossSeasonTamil9#OnnumePuriyala#BiggBoss9#VijaySethupathi#BiggBossTamil#BB9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/ZdbtAolWH8
விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவருடன், தபு மற்றும் சம்யுக்தாவுடன் இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் ஹைதராபாத்தில் ஒரு பூஜையுடன் தொடங்கியது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. சமீபத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படமான 'தலைவன் தலைவி', ஆகஸ்ட் 2025-இல் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த படத்தில் நடிகை நித்யா மேனனும் நடித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.