scorecardresearch

Vijay Sethupathi’s Next: ’சங்கத் தமிழனான’ விஜய் சேதுபதி!

Vijay Sethupathi’s Next: ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

Vijay Sethupathi - Sanga Tamizhan firstlook
சங்கத் தமிழன் விமர்சனம்

Vijay Sethupathi’s Next: தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தவர்கள் பட்டியலில் விஜய் சேதுபதிக்கு ஓர் முக்கிய இடம் உண்டு.

தற்போது இவர் ’கடைசி விவசாயி, சிந்துபாத், லாபம், மாமனிதன், சைரா நரசிம்ம ரெட்டி ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதைத் தவிர, ’வாலு, ஸ்கெட்ச்’ ஆகியப் படங்களை இயக்கிய விஜய் சந்தரின் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமிட்டானார் விஜய் சேதுபதி.

தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘சங்கத் தமிழன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள, இதன் போஸ்டரில் விஜய் சேதுபதி, கூட்டத்தின் நடுவே நின்று தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, நாசர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் ‘சங்கத் தமிழன்’ படத்திற்கு விவேக் – மெர்வீன் இசையமைக்கிறார்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay sethupathi sanga thamizhan tamil cinema vijay chander