Advertisment

ஜவான் சக்சஸ் மீட்... ஷாருக்கானுக்கு் ப்ரப்போஸ் செய்த விஜய் சேதுபதி : இன்ஸ்டா வீடியோ வைரல்

ஜவான் படத்தின் வெற்றி விழாவில் ஷாருக்கான் விஜய் சேதுபதி இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தி அன்பை பறிமாறிக்கொண்ட வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Shah rukh khan and Vijay Sethupathi

ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்

ஆங்கிலத்தில் படிக்க...

Advertisment

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ஜவான் திரைப்படம் இந்திய திரையுலக பாக்ஸ் ஆபீஸில் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், ஒரு ஆண்டில் 2 பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து ஷாருக்கான் முன்னிலையில் உள்ளார். இதனிடையே ஜவான் படத்தின் வெற்றி விழாவில் ஷாருக்கான் விஜய் சேதுபதி இருவரும் நெருக்கம் காட்டிய வீடியோ இணயைத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இயக்குனர் அட்லி பாலிவுட் சினிமாவில் கால்பதித்து பெரிய வெற்றியை கொடுத்த படம் ஜவான். ஷாருக்கான் என்ற பாலிவுட் பாட்ஷா ஹீரோவாக இருந்தாலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, அனிருத், எடிட்டர் ரூபன் உள்ளிட்ட தென்னிந்திய குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த செப்டம்பர் 7-ந் தேதி வெளியான ஜவான் திரைப்படம் இதுவரை 700-கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில், நடைபெற்ற ஜவான் வெற்றி விழாவில், படத்தில் ஹீரோ வில்லன் என எதிர் துருவங்களாக நடித்திருந்தாலும் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நிஜ வாழ்க்கையில், நட்பு பாராட்டி வருவது ஜவான் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது வெளியாகியுள்ள இன்ஸ்டா வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது.

"ஐ லவ் யூ சார்" என்று விஜய் சேதுபதி ஷாருக்கான் மீதான தனது அபிமானத்தை வெளிப்படுத்துவதுடன் தொடங்கும் இந்த வீடியோவில், ஷாருக், "நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன், சார்" என்று பதில் அளித்துள்ளார். மேலும்  ஷாருக் விளையாட்டுத்தனமாக, ", நான் உங்களுக்கு முன்மொழிந்தால், நாம் இப்போது திருமணம் செய்து கொள்ளலாம், சார்" என்று கூறுகிறார். அதற்கு பதிலளித்த விஜய், “இதில் ஒன்றும் தவறில்லை சார்என கூறியுள்ளார். அடுத்து நாம் ஒன்றாக நிறைய நடிப்போம்" என்று புன்னகையுடன் ஷாருக் கூறுகிறார்.

அதன்பிறகு இருவரும் ஒன்றாக காதல் நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஷாருக் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து ஒரு ரசிகர் அவர்களின் ஜவான் படத்தின் கடைசி காட்சியை குறிப்பிட்டு, விஜய்யின் கதாபாத்திரம், காளி, ஒரு ஒப்பந்தத்திற்கு ஈடாக தனது உயிரைக் காப்பாற்றுமாறு ஷாருக்கானிடம் கேட்பார். இதை மேற்கோள் காட்டி"இது அவர் இறப்பதற்கு முன் பேசிக்கொண்டிருந்த ஒப்பந்தம்" என்று கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகர், "காளியும் விக்ரமும் ஒன்றாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்" என்று விளையாட்டுத்தனமாக குறிப்பிட்டுள்ள நிலையில், மற்றொரு ரசிகர், "புரோமான்ஸ் அதன் உச்சத்தில் இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜவான் திரைப்படம் யாஷின் கேஜிஎஃப்: சாப்டர் 2 படத்தின் மொத்த ஹிந்தி வசூலை முறியடித்தது. படம் வெளியான 13 நாட்களுக்குள் இந்தியாவில் ரூ.507 கோடி வசூல் செய்துள்ளது. இன்றுவரை உலக அளவில் ரூ 900 கோடி வசூல் செய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Sethupathi Shah Rukh Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment