scorecardresearch

sindhubaadh Tamil Movie: தடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்!

sindhubaadh Movie: இதற்கு முன்பு ’96’ படம் ரிலீஸாகாமல் பிரச்னை ஏற்படவே, தனது பணத்தைக் கொடுத்து ரிலீஸ் செய்ய உதவி செய்தார் விஜய் சேதுபதி.

sindhubaadh Tamil Movie: தடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்!
sindhubaadh, sindhubaadh Tamil Movie, விஜய் சேதுபதி, sindhubaadh Full Movie

sindhubaadh Tamil Movie: நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சிந்துபாத் திரைப்படம் வெளியாகியுள்ளது. பல்வேறு தடைகளைத் தாண்டி இந்தப் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். சூர்யா விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வாசன் மூவிஸ் மற்றும் கே புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இதனைத் தயாரித்திருக்கிறது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

Sindhubaadh Release Updates: விஜய் சேதுபதி – அஞ்சலி கெமிஸ்ட்ரி வேற லெவல்!

இந்தப் படம் சிவகார்த்திகேயனின் ’மிஸ்டர் லோக்கல்’ படத்தோடு வெளியாக இருந்தது. ஆனால் சிந்துபாத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.புரொடக்‌ஷனின் ராஜராஜனுக்கும், ‘பாகுபலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா நிறுவனத்திற்கும் இருந்த பண பிரச்னைகளில், சிந்துபாத் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் கோர்ட்டில் ’ஸ்டே’ வாங்கியது ஆர்கா நிறுவனம்.

பின்னர் படம் கடந்த வாரம் ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பிரச்னைகள் தீர்க்கப்படாததால் ரிலீஸாகவில்லை. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.

இதற்கு முன்பு ’96’ படம் ரிலீஸாகாமல் பிரச்னை ஏற்படவே, தனது பணத்தைக் கொடுத்து ரிலீஸ் செய்ய உதவி செய்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் சிந்துபாத்தின் பட ரிலீஸுக்கும் தனது சம்பளத்திலிருந்து ஒரு கோடியை விட்டுக் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் தனது பங்கிற்கு 1 கோடி கொடுத்துள்ளார். இளையராஜா தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்து பல படங்களுக்கு உதவியதைப் போல, அவரது மகனும் செய்திருப்பதை சினிமா வட்டாரத்தினர் பாராட்டி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து இன்று ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சிந்துபாத்தின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் மீண்டும் படத்தின் வெளியீடு தள்ளிப் போகுமோ என்ற அச்சத்தில் மூழ்கினர் ரசிகர்கள். ஆனால் 11.30 மணிக்குப் பிறகு திரையிடப்பட்டது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay sethupathi sindhubaadh anjali su arun kumar