ஒரு ஆண்டுக்குப் பிறகு சர்ச்சையான விஜய் சேதுபதி வீடியோ; லஷ்மி ராமகிருஷ்ணன் விமர்சனம்

நடிகர் விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் கோயிலில் சாமிகளுக்கு அபிஷேகம் செய்வது பற்றி பேசியது தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. விஜய் சேதுபதியின் கருத்தை நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

By: Updated: May 9, 2020, 04:59:50 PM

நடிகர் விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் கோயிலில் சாமிகளுக்கு அபிஷேகம் செய்வது பற்றி பேசியது தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. விஜய் சேதுபதியின் கருத்தை நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் ஆகியோரின் படங்களிலும் நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து தமிழகத்தில் மதமாற்றம் பிரசாரங்கள் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இதற்கு எதிர்வினையாற்றிய விஜய் சேதுபதி “டேய் போய் வேற வேலையப் பாருங்கடா” என்று அதிரடியாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, மதவாதம் பற்றி பேசுகிறவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார். விஜய் சேதுபதியின் இந்த பேச்சுகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சன் டிவில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் பேசிய விஜய் சேதுபதி, ஒரு ஊர்ல சாமிக்கு அபிஷேகம் பண்ணுவாங்க இல்லையா? அபிஷேகம் பண்றத காட்டுவாங்க பக்தர்கள் பார்க்கலாம். பண்ணி முடிச்சுட்டு பின்னர் துணி போட்டு மூடியிருக்காங்க. அப்போது அந்த குழந்தை தாத்தாகிட்ட கேட்டிருக்கு என்ன தாத்தா துணி போட்டு மூடிட்டாங்க. சாமி இவ்வளவு நேரம் குளிச்சுட்டிருந்ததா இப்ப டிரஸ் மாத்தப் போகுது அதான் மூடியிருக்குன்றாங்க. என்ன தாத்தா குளிக்கிறதையே காட்டினாங்க டிரஸ் மாத்துறப்போ மூடிட்டாங்கனு சொல்லியிருக்கு குழந்த” என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட ஓராண்டாகிவிட்ட நிலையில், விஜய் சேதுபதியின் பேச்சு கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை புண்படுத்துவதாகக் கூறி சிலர் சமூக ஊடகங்களில் வீடியோவைப் பகிர்ந்ததால் சர்ச்சையானது.


இதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி பேசியது குறித்து நடிகையும் இயக்குனருமான லஷ்மி ராமகிருஷ்ணன், “இது கடவுள் நம்பிக்கையுள்ளவர்களுக்கும் ஆலயத்தையும் சடங்குகளையும் புனிதமாகக் கருதுபவர்களுக்கு நிச்சயமாக வேதனை அளிக்கும். வேறு எந்த மதத்தின் மத நடைமுறைகளை யாரும் கேலி செய்யத் துணிய மாட்டார்கள், நான் ஒப்புக்கொள்கிறேன் !! ஆனால் மீண்டும், நான் ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால், நீங்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னாள் எந்த அர்த்தத்தில் எப்போது அவர் அப்படி பேசினார் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி ஓராண்டுக்கு முன்பு தான் தொகுத்து வழங்கிய டிவி நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vijay sethupathi speech about temple deity bathing controversy lakshmi ramakrishan criticize

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X