96 Movie Release: உங்கள் பள்ளி பருவத்தை நினைவூட்ட நாளை வருகிறது 96 திரைப்படம்

96 Movie Releasing Tomorrow Starring Vijay Sethupathi-Trisha Krishnan: நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடித்திருக்கும் 96 திரைப்படம் நாளை வெளியாகிறது

96 Movie Releasing Tomorrow Starring Vijay Sethupathi-Trisha Krishnan: நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடித்திருக்கும் 96 திரைப்படம் நாளை வெளியாகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
96 Movie Release, 96 Movie

96 Movie Release, 96 Movie

96 Movie : நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா உட்பட பட நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் 96 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

Advertisment

நந்தகோபால் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 96. இப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

96 Movie : 96 திரைப்படம் ரிலீஸ் :

த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் நடக்கும், முன்னாள் மாணவர் கூட்டத்திற்கு வருகின்றனர். அங்கு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். அப்போது இருவருக்கு இடையே இருக்கும் பழைய காதலை உணர்த்தும் வகையில் பல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘காதலே காதலே’ பாடல் வெளியிட்ட பின்னர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியது. அதனை தொடர்ந்து படக் குழுவினர் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட பிறகு ஆர்வம் மேலும் கூடியுள்ளது.

நாளை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் வெளியாவதை அடுத்து டிக்கெட் பதிவு செய்ய அனைவரும் நீயா நானா என முந்தியடித்து வருகின்றனர்.

Tamil Cinema Vijay Sethupathi Trisha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: