/tamil-ie/media/media_files/uploads/2018/10/96.jpg)
96 Movie Review
Vijay Sethupathi To Launch The Trailer Of Trisha60: நடிகர் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் இணைந்து நடித்த ‘96’ திரைப்படம் கடந்தாண்டு வெளியானது.
பள்ளிப் பருவ காதலை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது த்ரிஷாவுக்காக, விஜய் சேதுபதி என்ன செய்யப் போகிறார் தெரியுமா?
த்ரிஷாவின் பிறந்தநாளை ஒட்டி, நாளை ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
இந்தப் படத்தை இயக்குநர் திருஞானம் இயக்க, 24 ஹவர்ஸ் புரொடக்ஷன் தயாரிக்கிறது. த்ரிஷாவின் 60-வது திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் ’பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தின் ட்ரைலரை நாளை வெலியிடுகிறார் விஜய் சேதுபதி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.