Advertisment

காதலும், வீரமும்... விஜய் சேதுபதி - வெற்றிமாறன் கூட்டணியில் விடுதலை 2; ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரல்!

விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது,

author-image
WebDesk
New Update
VJS V2

விடுதலை 2 ஃபர்ஸ்ட் லுக்

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறன், இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

மேலும் இந்த படத்தின் முடிவில் 2-ம் பாகத்திற்கான சில காட்சிகள் இணைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக 2-ம் பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி, சூரி ஆகியோருடன், மஞ்சுவாரியார், பிரகாஷ்ராஜ், அட்டக்கத்தி தினேஷ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இளையராஜா இசையமைத்து வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடுதலை 1 மற்றும் 2-ம் பாகம் ரேட்ரம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில், தற்போது விடுதலை படத்தின் 2-ம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே தற்போது விடுதலை 2-ம் பாகத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒரு போஸ்டரில் கையில் அரிவாலுடன் ஆக்ரோஷமாக இருக்கும் விஜய் சேதுபதி மற்றொரு போஸ்டரில் மஞ்சுவாரியாருடன் ரொமான்ஸ் மோடில் இருக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று வெளியிடப்பட்ட ஒரு போஸ்டரில், அரிவாள் செய்யும் இடத்தில் தீப்பிழம்பில் அரிவாள் இருப்பது போல் காட்டப்பட்டிருந்தது. இதன் மூலம் விடுதலை 2 படம் அதிரடி ஆக்ஷனுன் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Cinema News Vetrimaaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment