/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2023-02-04T102016.827.jpg)
self-respect wedding - vijay Sethupathi - Chennai
Vijay Sethupathi Tamil News: மக்கள் செல்வன் "விஜய் சேதுபதி" ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் J குமரன். இவர் சாதி மதம் கடந்து சுயமரியாதை திருமணம் செய்துள்ளார். இத்திருமணம் நடிகர் விஜய் சேதுபதி முன்னிலையில் நேற்று காலை சென்னையில் நடைபெற்றது.
உலகில் சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம். அன்பை பரப்புவோம் இதை ரசிகர்களிடத்தில் பரப்பி, அன்புக்கு வடிவமாக அனைவராலும் விரும்பப்படும் மக்கள் செல்வன் "விஜய் சேதுபதி" ரசிகர்மன்றத்தின் பொதுச்செயலாளர் J குமரன், சாதி மதம் கடந்த, சடங்குகளற்ற முறையில் அன்பால் இணையும் விதமாக, சுயமரியாதை மணம்புரிந்துள்ளார். அன்பால் இணையும் விதமாக தன் வாழ்வின் இணையை, சுயமரியாதை திருமண முறையில் திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் சுற்றம் சூழ, நண்பர்கள் கலந்துகொள்ள நடைபெற்றது. நடிகர் விஜய் சேதுபதி மணமக்களை ஆசிர்வதித்து வாழ்த்தினார்.
#InPics || சுய மரியாதை திருமணம்: ரசிகர் மன்ற செயலாளருக்கு நடத்தி வைத்த விஜய்சேதுபதி!https://t.co/gkgoZMIuaK | #VijaySethupathi | @VijaySethuOffl | @VijaySethu_FC | @VijaySethuFanspic.twitter.com/GVH3aBJOiH
— Indian Express Tamil (@IeTamil) February 4, 2023
செய்தி: நவீன் குமார்
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.