Advertisment

2898 கல்கி படத்தின் போட்டியைத் தாண்டி விஜய் சேதுபதியின் மகாராஜா 100 கோடி வசூல்

இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், சச்சனா நமிதாஸ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள மகாராஜா திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Maharaja Vijay Sethupathi

விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படம்

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியீடான மகாராஜா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நிலவிய வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் அளித்துள்ளது. இந்த படம் வெளியாகி 3-வது வார இறுதியில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இது சுந்தர் சியின் அரண்மனை 4-ஐ தாண்டி இந்த ஆண்டில் மிகப்பெரிய தொகையை வசூலித்த தமிழ் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. பிரபாஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கல்கி 2898 ஜூன் 27-ம் வெளியான பிறகும், மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் சறுக்கல் இல்லாமல் வசூலைத் தக்கவைத்துக் கொண்டது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Vijay Sethupathi’s Maharaja earns Rs 100 crore despite Kalki 2898 AD onslaught

சினிமா வர்த்தக கண்காணிப்பாளரான சாக்னில்க் குறிப்பிட்டுள்ளபடி, மகாராஜா திரைப்படம் இந்தியாவில் சுமார் ரூ.76 கோடியும், வெளிநாடுகளில் சுமார் ரூ.24 கோடியும் வசூலித்துள்ளது. இந்த அற்புதமான சாதனையானது, இந்த வருடத்தின் முந்தைய தமிழ்த் திரைப்படமான அரண்மனை 4-ஐத் தாண்டியுள்ளது. அரண்மணை 4 திரைப்படம் உலக அளவில் ரூ 99 கோடியுடன் முடிவடைந்தது. ஆனால், அரண்மனை 4 படத்தின் தயாரிப்பாளர்கள் படம் ரூ. 100 கோடியை ஈட்டியுள்ளதாகக் கூறியுள்ளனர். மகாராஜா இப்போது திரையரங்குகளில் சுமார் ரூ 105 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சாக்னில்க் இணையதளம் தெரிவித்துள்ளது.

கல்கி 2898 படத்தின் தமிழ் வெர்ஷன் மகாராஜாவை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கடுமையான போட்டிக்கு மத்தியிலும் விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்டப்பட்டது. குரங்கு பொம்மை புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய மகாராஜா, முடிதிருத்துபவர் வீட்டில் இருந்து ஒரு குப்பைத் தொட்டியை காணாமல் போன வழக்கைப் பற்றிய நான் லீனியர் படம் இது.

மகாராஜா திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனால், அது பாலியல் வன்முறையைக் கையாண்ட விதத்தில் நுண்ணுணர்வு இல்லாததால் எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸின் கிருபாகர், படத்தை இரண்டு நட்சத்திரங்களுடன் மதிப்பிட்டு எழுதினார், “ரத்தம் சிந்தியதற்குப் பின்னால் உள்ள காரணம் தமிழ் சினிமா நுண்ணுணர்வு இல்லாமல் திரும்பிச் செல்கிறது. ஒரு காரணத்திற்காக போராடும் திரைப்படங்கள் என்று வரும்போது சுரண்டலையும் கவலையையும் பிரிக்கும் மெல்லிய கோடு மட்டுமே உள்ளது. மகாராஜா திரைப்படம் அதை சரியாக கையாண்டதாகத் தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் அனுராக் காஷ்யப், சச்சனா நமிதாஸ் மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment