/tamil-ie/media/media_files/uploads/2019/04/Vijay-Sethupathi-Sindhubaadh-release-date.jpg)
Sindhubaadh Leaked in Tamilrockers, Sindhubaadh Full Movie Free Download, சிந்துபாத், தமிழ் ராக்கர்ஸ்
Sindhubaadh Release Date: நிற்கக் கூட நேரமில்லாமல் அடுத்தடுத்தப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.
தற்போது கடைசி விவசாயி, சிந்துபாத், மாமனிதன், சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சிந்துபாத் திரைப்படத்தை இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.
கே.புரொடக்ஷன் மற்றும் வாசன் மூவிஸ் இணைந்து இதனை தயாரிக்கிறது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
தற்போது இந்தப் படம் மே 16-ம் தேதி ரிலீஸாகிறது என விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ????#SindhubaadhFromMay16
An #SuArunkumar Film | A @thisisysr Musical |
Produced by @KProductionsInd - @YSRfilms - @VANSANMOVIES@VijaySethuOffl@yoursanjali@Rajarajan7215@irfanmalik83@Muzik247in@CtcMediaboypic.twitter.com/aDxxMddld2
— VijaySethupathi (@VijaySethuOffl) April 14, 2019
பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகியப் படங்களைத் தொடர்ந்து 2019-ல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம் சிந்துபாத் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.