/tamil-ie/media/media_files/uploads/2019/11/Vijay-Sethupathi-Kamal-Haasan.jpg)
Vijay Sethupathi Kamal Haasan
Kamal Haasan: நடிகர் கமல்ஹாசன் கடந்த 2016-ல் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோது, வைக்கப்பட்டிருந்த டைட்டானியம் கம்பியை அகற்ற அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளார். அதனால் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். 1 மாதம் கழித்து 'இந்தியன் 2' படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார், அதோடு தனது கட்சியான ‘மக்கள் நீதி மய்யத்தின்’ வேலைகளையும் தொடருவார்.
இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை அணுகப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை சமீபத்தில் முடிவடைந்த கமல் 60 நிகழ்வில் உறுதிப்படுத்தினார் சேதுபதி. இந்தியன் 2 படத்தில் நடிக்க தன்னை அணுகியதாகவும், ஆனால் கையில் இருக்கும் படங்கள் காரணமாக குறிப்பிட்ட தேதிகளை ஒதுக்க முடியாமல் போய் விட்டதாகவும் குறிப்பிட்ட விஜய் சேதுபதி, நடிக்கவும், கற்றுக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்குமாறு கமலை கேட்டுக்கொண்டார். இதற்கிடையே தற்போது இந்தியன் 2 படத்துக்காக தேதிகள் அட்ஜெஸ்ட் செய்யப்பட்டு, இந்த மிரட்டலான காம்போ உருவாக்கப்பட்டுள்ளதாம். விஜய் சேதுபதி சம்பந்தப் பட்ட காட்சிகள் பிப்ரவரி 2020-ல் படமாக்கப்பட உள்ளதாம்.
தவிர, கமல் இயக்கும் 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி கையெழுத்திட்டுள்ளார் என்று இன்னொரு செய்தி உலா வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்த சேதுபதி, ‘தளபதி 64’ படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.