சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது : பகவத் கீதை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி

புனித நூல் பகவத் கீதைப் பற்றி விஜய் சேதுபதி அவதூறாக பேசியதாக வந்த புகைப்படத்தில் இருப்பது பொய் என விஜய் சேதுபதியே விளக்கி இருக்கிறார்.

விஜய் சேதுபதி கடந்த பிப்ரவரி 6-ம் தேதி செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கத் தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘டிஜிகாப்’ என்ற மொபைல் செயலி குறித்து பேசினார்.

விஜய் சேதுபதி விளக்கம்

அவருடைய பேச்சு பிரபல செய்தி ஊடகத்தில் ஒரு புகைப்படமாக வெளியானது. அதில் “காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி, இந்த ‘டிஜிகாப்’ செயலி மூலம் குறையும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை மர்ம நபர்கள் சிலர், பகவத் கீதையை விஜய் சேதுபதி அவதூறாக பேசியதுபோல இருக்கும் வாசகத்தை பரப்பினர் . இந்த புகைப்படத்தை போட்டு இந்துக்களின் எதிரி விஜய் சேதுபதி என சிலர் சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் உண்மை இதுதான் என விஜய் சேதுபதியே விளக்கம் அளித்துள்ளார்.

அதில், செய்தி நிறுவனத்தின் உண்மைச் செய்தியையும், விஷமிகள் பரப்பிவிட்டு போட்டோ ஷாப் கருத்தையும் பதிவிட்டுள்ளார். அத்துடுன் அவர் , “என் அன்பிற்குரிய மக்களுக்கு‬ ‪பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை‬ பேசவும் மாட்டேன்‬. ‪சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது‬. ‪எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்‬.” எனப் பதிவிட்டிருந்தார்.

இதன் மூலம் விஜய் சேதுபதிக்கும் பகவத் கீதைக்கும் தொடர்பிட்டு பரப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close