அயர்ன் மேனுக்கு குரல் கொடுத்து அடுத்த ஃபர்னிச்சரை உடைத்த விஜய் சேதுபதி

கிட்டத்தட்ட 10 வருடமாக ஒரு குரலிலேயே பார்த்துப் பழகிய படத்தை, திடீரென மாற்றுவதை ரசிகர்களாகிய நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்

Vijay Sethupathy - Avengers Tamil Trailer
Vijay Sethupathy – Avengers Tamil Trailer

சூப்பர் ஹீரோ படமான அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இதன் நான்காம் பாகம் ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகிறது. இதற்கு ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆண்ட்ரியா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இதில் அயர்ன்மேன் கதாபாத்திரத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி தமிழில் டப்பிங் பேசியுள்ளார். அதேபோல் பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு நடிகை ஆண்ட்ரியா பேசியுள்ளார்.

ஏற்கனவே ’அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்துக்கு எந்திரன் படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து கிளைமேக்ஸ் எடு’க்கப்பட்டதாக அதன் இயக்குநர் தெரிவித்திருந்தார்.

இது குறித்த கேள்வி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “நம் ஆட்கள் எதைச் செய்தாலும் மதிக்க மாட்டார்கள். வெளியில் இருந்து யாராவது பாராட்டினால் தான் ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள். இந்தப் படத்தில் ஒருவித பயத்துடனே தான் வேலை செய்யத் துவங்கினேன். பாடல் பிடித்தவர்களுக்கு நன்றி. பிடிக்காதவர்களுக்கு அடுத்தமுறை சிறப்பாக செயல்படுகிறேன்” என்றார்.

இதற்கிடையே விஜய் சேதுபதியின் குரலில் அவெஞ்சர்ஸ் ட்ரைலரைப் பார்த்த அயர்ன் மேன் ரசிகர்கள் உச்சக் கட்ட கோபத்தில் இருக்கிறார்கள். யூ-ட்யூப் மற்றும் ட்விட்டரில் விஜய்சேதுபதி வெளியிட்ட அந்த ட்ரைலர் பதிவிலும் போய், தங்களுக்கு பழைய குரல் தான் வேண்டுமென கமெண்ட் மழை பொழிகிறார்கள்.

கிட்டத்தட்ட 10 வருடமாக ஒரு குரலிலேயே பார்த்துப் பழகிய படத்தை, திடீரென மாற்றுவதை ரசிகர்களாகிய நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியுமென, தங்களது அதிருப்தியை வெளிக்காட்டி வருகிறார்கள்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay sethupathy lends his voice for iron man

Next Story
Tamilrockers: ‘நட்பே துணை’யை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்Tamilrockers, Natpe thunai movie download, நட்பே துணை, தமிழ் ராக்கர்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express