விஜய் சேதுபதி பட நடிகை திடீர் விவாகரத்து: அவரே வெளியிட்ட அறிவிப்பு
விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் ஹீரோயினும் பிரபல தெலுங்கு நடிகையுமான நிஹாரிகா தனது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் ஹீரோயினும் பிரபல தெலுங்கு நடிகையுமான நிஹாரிகா தனது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Advertisment
நடிகை நிஹாரிகா தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹாரிகா. இவர் நடிகர் விஜய் சேதிபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானர்.
நடிகை நிஹாரிகா கடந்த 2020-ம் ஆண்டு சைதன்யா என்பவரை காதலித்து திருமணம் கொண்டார். நிஹாரிகாவின் கணவர் சைதன்யா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
நிஹாரிகா மற்றும் சைதன்யா இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே பிரச்னை இருந்ததாகவும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் டோலிவுட்டில் பேசப்பட்டது.
இந்நிலையில், நடிகை நிஹாரிகா தனது விவாகரத்து குறித்து இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில், “நானும், சைதன்யாவும் ஒருமனதாக பிரிய முடிவு எடுத்துள்ளோம். ஆதரவாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. புதிய வாழ்க்கையை ஏற்றுகொள்ள தேவையான ப்ரைவசியை கொடுங்கள். புரிந்து கொண்டதற்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை நிஹாரிகாவின் இந்த விவாகரத்து அறிவிப்பு தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"