New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/22/ipFTYkWJYpWSB0KnLTOT.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். நடிகர் என்பதையும் கடந்து விஜய் சேதுபதியின் யதார்த்தமான பேச்சுக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், அவரது மகன் சூர்யா கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
முன்னதாக, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்போது ‘ஃபீனிக்ஸ்’என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜையின் போதும் கூட சூர்யாவின் பேச்சுகளுக்கு பல விதமான ட்ரோல்கள் பரவின. அதன்பின்னர், வேறு இந்த நிகழ்வுகளிலும் சூர்யாவை பார்க்க முடியவில்லை.
இந்நிலையில், சூர்யா கூறியதாக ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது. அதாவது, தனது தந்தை நாளொன்றுக்கு ரூ. 500 மட்டுமே தன்னுடைய செலவுக்கு கொடுப்பதாகவும், தான் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளதாகவும் சூர்யா கூறியதைப் போன்ற செய்தி பரவி வருகிறது. மேலும், அதனால் தான் சினிமாவில் தான் ஜெயிப்பதற்காக வந்துள்ளதாகவும், அத்தகவலில் இடம்பெற்றுள்ளது.
இதனால் சூர்யாவை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், அப்படியொரு செய்தியை சூர்யா கூறவில்லை என்பதே நிதர்சனம். சூர்யாவின் புகைப்படத்துடன் இவ்வாறு போலியான தகவல் பரவி வருகிறது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரித்த போதும், பொய்க்கு எதற்காக பதிலளிக்க வேண்டுமென சூர்யாவின் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.