/tamil-ie/media/media_files/uploads/2019/03/vijay-shankar-meet-vijay-sethupathi.jpg)
vijay shankar meet vijay sethupathi, விஜய் சங்கர்
நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்த இந்திய அணி கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் புகைப்படம் இணையத்தளம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். ஆரண்ய காண்டம் படத்தை இயக்கியுள்ள தியாகராஜன் குமாரராஜா, இதே படத்தை இயக்கியுள்ளார்.
ஃபஹத் ஃபாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், சமந்தா உட்பட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் வரும் 29ம் தேதி வெளியாக தயாராக உள்ளது. இதனால் விஜய் சேதுபதியின் மவுசு அதிகரித்திருக்கிறது.
விஜய் சேதுபதியை சந்தித்த விஜய் சங்கர்
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விஜய்சங்கர், விஜய் சேதுபதியை நேரில் சந்தித்தார். அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டார் விஜய்சங்கர்.
March 2019Happy to meet Makkal Selvan @VijaySethuOffl#FanBoyMomentpic.twitter.com/lPmnVW2rIN
— Vijay Shankar (@vijayshankar260)
Happy to meet Makkal Selvan @VijaySethuOffl#FanBoyMomentpic.twitter.com/lPmnVW2rIN
— Vijay Shankar (@vijayshankar260) March 16, 2019
அந்த பதிவில், “மக்கள் செல்வனை சந்தித்ததில் மகிழ்ச்சி #ரசிகனிந்தருணம்” எனப் பதிவிட்டிருந்தார். வரும் 23ம் தேதி ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.