நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்ஜய் தனது தந்தையைப் போலவே, சினிமாவில் நடிகராக கால் பதிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தாத்தா எஸ்.ஏ. சந்திராகசேகர் பாதையில் இயக்குநராக களம் இறங்கியுள்ளார். ஒரு குறும்படம் படப்பிடிப்பில் விஜய் மகன் ஜேசன் சஞ்ஜய் இருக்கும் செம மாஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ் திரையுலகம் வாரிசுகளால் நிறைந்தது. நடிகர் சிவாஜி கணேஷன் – பிரபு – விக்ரம், நடிகர் முத்துராமன் – கார்த்திக் – கௌதம், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் – விஜய், நடிகர் சிவக்குமார் – சூர்யா, இயக்குநர், நடிகர் டி ராஜேந்தர் – சிலம்பரசன், இயக்குநர் கஸ்தூரி ராஜா – தனுஷ் இப்படி வாரிசு நடிகர்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர்.
எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய்யை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தினார். அதற்கு பிறகு நடிகர் விஜய் படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ரசிகர்களால் அன்புடன் தளபதி என்று கொண்டாடப்படுகிறார். வாரிசு திரைப்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்ஜய் கனடாவில் படித்து வருகிறார். ஜேசன் சஞ்ஜய் தனது தந்தையைப் போல தமிழ் சினிமாவில் நடிகராக கால் பதிப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், ஜேசன் சஞ்ஜய் விஜய் ஒரு ஆங்கிலக் குறும்படத்தின் படப்பில் ஈடுபட்டுள்ள செம மாஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. விஜய் மகன் ஜேசன் சஞ்ஜய் தனது தாத்தா எஸ்.ஏ.சி பாதையில் இயக்குநராக கால்பதித்துள்ளார்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்ஜய் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்படம் தொடர்பாக படித்து வருகிறார். சினிமாவில் கால் பதிக்க உள்ள ஜேசன் சஞ்ஜய் சினிமாவில் நுழைவதற்கு தன்னை தயார் செய்து வருகிறார்.
இந்த வீடியோவில், ஜேசன் சஞ்ஜய் தனது நண்பர்களுடன் குறும்படத்தை படமாக்குவதைப் பார்க்கும்போது அவர் தனது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரைப் போல இயக்குநராக களம் இறங்க உள்ளது தெரிகிறது. இந்த வீடியோவைப் பார்த்த விஜய் ரசிகர்கள் ஜேசன் சஞ்ஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக 2020-ம் ஆண்டில், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தில் ஜேசன் சஞ்ஜய் ஹீரோவாக அறிமுகம் ஆவார் என்று தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், சஞ்ஜய் கனடாவில் படித்து வருவதால் அந்த திட்டம் தள்ளிப்போனது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“