/tamil-ie/media/media_files/uploads/2020/04/vijay-son-vijay-sethupathi.jpg)
vijay son sanjay introduce hero, vijay son jason sanjay introuduce hero, vijay son sanjay, விஜய் மகன் ஜேசன் சஞ்ஜய், விஜய் மகன் சஞ்ஜய், vijay sethupathi, ஹீரோ ஆகிறாரா விஜய் மகன் சஞ்ஜய், vijay son intoroduce hero in tamil cinema, விஜய் சேதுபதி, jason sanjay, tamil cinema news, latest tamil cinema news, latest vijay news, vijay sethupathi, coronavirus lock down
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மகன் சினிமாவில் கதநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவள் வெளியானது.
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருடைய மாஸ்டர் படம் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கால் தள்ளிப் போயுள்ளது. இந்தப் படத்தில் விஜய் உடன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்துவது கட்டாயமானதால், அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு, விஜய் மகன் சஞ்ஜய், கொரோனா ஊரடங்கால் கனடாவில் இருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் இதனால் நடிகர் விஜய் கவலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதற்கு, விஜய் மகன் கனடாவில் பாதுகாப்பாக இருப்பதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், சஞ்ஜய் பற்றிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விஜய் மகன் சஞ்ஜய் சினிமா ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் இயக்குனர் சுகுமார் எழுதி தயாரித்திருக்கும் படம் ‘உப்பெனா’. இந்தப் படத்தில் தெலுங்கு சினிமா நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி வில்லனாக ராயாணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்துவிட்ட நிலையில் கொரோனா ஊரடங்கால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் விஜய் சேதுபதி வாங்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில்தான் நடிகர் விஜய் மகன் சஞ்ஜய் ஹீரோவாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் ரீமேக்கிலும் விஜய் சேதுபதியே வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் மகன் சஞ்ஜய் ஏற்கெனவே ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். அதனால், அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவலை பலரும் நம்பினார்கள்.
இது குறித்து விஜய் தரப்பினர் கூறுகையில், “இந்தச் செய்தியில் உண்மையில்லை. சஞ்ஜய் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஆனால், இப்போது நடிக்கவில்லை. அவரது படிப்பு முடிந்தவுடன் நடக்கலாம். அதுவும் சஞ்ஜயின் முடிவில்தான் இருக்கிறது” என்று இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் ரீமேக் படத்தில் விஜயின் மகன் சஞ்ஜய் ஹீரோவாக நடிக்கிறார் என்று கிளம்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தாலும் அவர் சினிமாவில் நடிப்பார் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.