லியோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், சென்னை விமானநிலையத்தில் விஜய் வருகை தந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைராகி வருகிறது.
லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அதிக எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருப்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இந்த படம் லோகேஷின் எல்.சி.யூ-வில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகவில்லை.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 உருவாக உள்ளது. இந்த படத்தின் வேலைகளுக்காக விஜய் அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். மேலும் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் பிரியங்கா மோகன் இடம் பெறள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லியோ படத்தின் அடியோ வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. சென்னை விமானநிலையத்தில் வருகை தந்த விஜய், ப்ளூ டெனிம் சட்டை அணிந்து மிகவும் கூலாக காணப்பட்டார். அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சையில் விஜய் பெயர் அடிப்பட்டதைத் தொடர்ந்து லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் இதற்கு விஜய் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“