scorecardresearch

“மாஸ்டர்” பொங்கலுக்கு ரெடியா? ஒருவழியாக உறுதியானது ரிலீஸ் தேதி!

எப்படியோ இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் செம்ம ஹேப்பி. 

“மாஸ்டர்” பொங்கலுக்கு ரெடியா? ஒருவழியாக உறுதியானது ரிலீஸ் தேதி!

Master Movie Latest Update : இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாஸ்டர் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறப்பு அனுமதி கேட்டால் அரசு பரிசீலித்து அனுமதி வழங்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் திரையரங்குகளில் படத்தை வெளியிடும் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி என்று கூறிய அவர் ஒ.டி.டி.யில் படத்தை வெளியிடுவது உகந்தது இல்லை என்றும் கூறினார். 2020ம் ஆண்டிலேயே மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த படத்தில் எக்கச்சக்கமானவர்களின் உழைப்பு இருப்பதால் இதனை திரையரங்குகளில் வெளியிடுவதே சிறந்தது என்று திரைப்பட குழுவினர் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தனர். தமிழகத்தில் உள்ள 80% திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியிட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அனுமதி கேட்டுள்ளது திரைபப்டக் குழு. எப்படியோ இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் செம்ம ஹேப்பி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay starer master movie release date confirmed