Thalapathy Vijay's 'GOAT' Box Office Day 1 Collection: நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் கோட்- தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். விஜய்யின் 68-வது படமான இந்த படம் நேற்று (செப்.5) உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்கள் மிகுவும் எதிர்பார்த்து காத்திருந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படம் மாஸ் ஆக்ஷனாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கிட்டதிட்ட ரூ.400 கோடி பொருட்செலவில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், படம் முதல் நாள் ரிலீஸில் வசூல் சாதனை படைத்துள்ளது. தமிழ் திரைத்துறையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஓபனராக கோட் படம் உள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.43 கோடி வசூல் சாதனை படைத்திருப்பதாக இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் கூறினார். இந்தியன் 2 முதல் நாள் வசூல் சாதனையான ரூ. 25.6 கோடியை கோட் படம் முறியடித்துள்ளது.
இதனிடையே முதல் நாளில் கோட் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ126.32 கோடி வசூலித்துள்ளதாக ஏ.ஜி.எஸ். நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“