Advertisment

3-வது பெரிய தமிழ் படம்... ஜெயிலரின் சாதனையை நோக்கி லியோ : 8-வது நாள் வசூல் நிலவரம் என்ன?

உலகம் முழுவதும் ரூ.604 கோடி வசூலித்த ரஜினியின் ஜெயிலருக்கு போட்டியாக பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் இதுவரை ரூ.140 கோடி பின்தங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Leo Movie Collection Update

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் நோக்கம் கொண்டது.

ஆங்கிலத்தில் படிக்க : Leo box office collection Day 8: Vijay-starrer aims to beat Jailer’s Rs 600 crore record, still has a long road ahead

Advertisment

பல தடைகளை கடந்து வெளியாகியுள்ள விஜயின் லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் வசூலை தக்கவைத்துக்கொள்ள போராடி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் லியோ. லியோ லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) இன் ஒரு பகுதியாக வெளியான இந்த படம், கார்த்தியின் கைதி மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய கடைகளுக்கு பிறகு நடைபெறுகிறது. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் மற்றும் கௌதம்மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

பல சர்ச்சைகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான லியோ, பாக்ஸ் ஆபிஸில் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் சாதனை படைத்து வந்தாலும், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் மோத்த வசூலான 604 கோடியை படம் கடப்பது கடினம் என்று கூறி வருகின்றனர். லியோ, திரைப்படம் வெளியாகி 8-வது நாளில்  10.25 கோடி ரூபாய் வசூலித்ததாக, இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் கூறுகிறார். இதன் மூலம் படத்தின் மொத்த உள்நாட்டு வசூல் ரூ.265.6 கோடியாக உயர்ந்துள்ளது.

எட்டாவது நாளில், லியோ 25.92% தமிழ் ஆக்கிரமிப்புகளைப் பதிவுசெய்தது, மாலைக் காட்சிகள் அதிக ட்ராஃபிக்கைப் பெறுகின்றன. லியோ படம் சென்னையில் கிட்டத்தட்ட 900 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. மேலும் நகரத்தின் ஆக்கிரமிப்பு விகிதம் சுமார் 33% ஆக இருந்தது. இதன் மூலம் லியோவின் உலகளாவிய மொத்த வசூல் தற்போது ரூ.464.3 கோடியாக உள்ளது. வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலாவின் கூற்றுப்படி, படத்தின் முதல் வார உலகளாவிய மொத்த வசூல் 461 கோடி ரூபாய்.

லியோ பாக்ஸ் ஆபிஸில் அதிரடி தொடக்கத்தைப் பெற்றது, இதன் காரணமாக முதல் நாளில் உலகளவில் ரூ 140 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்தியாவில், படம் முதல் நாளில் 64.8 கோடி ரூபாய் வசூலித்தது, ஆனால் இரண்டாவது நாளில் சுமார் 44% பெரும் வீழ்ச்சியைக் கண்டது. ஏழாவது நாளில் படத்தின் வசூல் மேலும் ஒரு பெரிய சரிவைக் சந்தித்தது. கடந்த செவ்வாயன்று ரூ 30.7 கோடியிலிருந்து புதன்கிழமை ரூ 13.4 கோடியாக குறைந்துள்ளது. இரண்டாவது வார இறுதியில் இப்படம் வசூலில் உயர்வை பதிவு செய்யுமா என்பது இன்னும் தெரியவில்லை.

உலகம் முழுவதும் 604 கோடி ரூபாய் வசூலித்த ரஜினியின் ஜெயிலருக்கு போட்டியாளராக பார்க்கப்பட்ட லியோ திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ்ப் படமாக பார்க்கப்படும், ஜெயிலர் படத்தை விட லியோ ரூ.140 கோடிக்கு பின்தங்கியுள்ளது. லியோ ஏற்கனவே ஜெயிலர் மற்றும் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு, மூன்றாவது பெரிய தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment