லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாகி 20 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்தியாவில் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸில் முன்னிலை பெற்றுள்ளது. இது குறித்து இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னிக்கின் படி, லியோ தனது மூன்றாவது செவ்வாய் அன்று ரூ 1.65 கோடியை வசூலித்துள்ளது. வார இறுதி வரை இது தொடர்ந்து வசூலில் சிறிய முன்னேற்றத்தைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது..
இதனிடையே லியோ இதுவரை அனைத்து மொழிகளையும் சேர்த்து இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ 332 கோடி வசூலித்துள்ளது. அதன் மூன்றாவது செவ்வாய் (இன்று) படம் சராசரியாக 16 சதவீத ஆக்கிரமிப்பை பதிவு செய்தது. இதன் மூலம் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் வெற்றியான ஜெயிலரின் வாழ்நாள் வசூலை மிஞ்சியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம்,இந்திய பாக்ஸ்ஆபீஸில் ரூ. 348 கோடி வசூலித்திருந்தது. விஜயின் சினிமா வாழ்க்கையில் இது அவருக்கு பெரிய வெற்றிப்படமாகும். அதே சமயம் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் உலகளவில் 604 கோடி வசூலித்துள்ள நீலையில், லியோ இதுவரை, உலகளவில் ரூ. 576 கோடி வசூலித்துள்ளது.
இதனிடையே லியோ படம் நவம்பர் 7-ந் தேதி வசூலில் மிகப்பெரிய சரிவை சந்தித்து இந்தியாவில் சுமார் 1.50 கோடி ரூபாய் வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையெ நவம்பர் 10 ஆம் தேதி, கார்த்தியின் 'ஜப்பான்' மற்றும் ராகவா லாரன்ஸ்-எஸ்.ஜே.சூர்யாவின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதனால் லியோ படம் திரையிடும் எண்ணிக்கை குறையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“