Vijay Television Bigg Boss season 4 today promos : தினம் தினம் போர் களத்தில் இருப்பது போல் இருக்கிறது பிக்பாஸ் வீடு. காலையில் இருந்து வெளியான இரண்டு ப்ரோமோக்களும் போட்டியாளர்களின் மனநிலை என்ன? எவ்வாறு விளையாடுகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
#Day60 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/JpU5jyvkcv
— Vijay Television (@vijaytelevision) December 3, 2020
சற்று நேரத்திற்கு முன்பு வெளியான இன்றைய இரண்டாவது ப்ரோமில் 13 எண்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் நான் தான் நிற்பேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார் அர்ச்சனா. அதற்கான ஜெஸ்டிஃபிக்கேஷனும் தருகிறார் அவர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த இடத்தில் சனம் நிற்கின்றார். அவ்ளோ பயம் இருக்குதுல்ல, ஒரு கால் பண்ண முடியாதுல்ல என்கிறார். சனம் 13வது இடம் செல்ல வேண்டும் என்றும் பாலா சொல்கிறார். அவர் செய்தது ஒரே ஒரு கால் செய்தார். அதிலும் ஃபெயில் ஆகிட்டார். ஒருவரை நாமினேசனில் இருந்து காப்பாற்றுவதும், செல்ஃப் நாமினேட் செய்வதும் ஒன்றா என்று கேட்கிறார் அவர்.
BB Promo 1 :
இன்று காலையில் வெளியான ப்ரோமோவில் அனைவரும் வட்டமாக அமர்ந்து பாலா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தனர். கேட்ட கேள்விக்கு ஒன் ஹவர் ஏன் பதில் சொல்லனும். உடனே போன வச்சுட்டு போய்ருப்பேனே! ஒருத்தர நாமினேசன்ல இருந்து ஸேவ் பண்றேனு சொல்லி ஸேவ் பண்ணுனதால அவங்க டாப் சிக்ஸும் வரக்கூடாது என்று கூறுகிறார் பாலா.
#Day60 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/8H8C4aBuYp
— Vijay Television (@vijaytelevision) December 3, 2020
அதற்கு ரமேஷ் எழுந்து நின்று, ”இப்போ டாப் சிக்ஸ்ல வரணும்னு எதிர்பாக்குறியா நீ” என்கிறார். அதற்கு அனிதா, எல்லாரும் உக்காந்து பேசுங்க என்கிறார். உன் மனசுல இருக்குறத எல்லாம் சொல்லிட்டு போன வச்சுட்ட… அவர் நைட்டு ஃபுல்லாம் தூங்குனாரா இல்லையான்னு தெரியல என்கிறார் ரமேஷ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil