vijay telivsion naam iruvar nammaku iruvar :விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் பெரும்பாலான மக்களின் ஃபேவரெட். மாயனாக கலக்கிக் கொண்டிருக்கும் சரவணன் மீனாட்சி புகழ் மிர்ச்சி செந்திலுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள். அதுமட்டுமில்லை இவருக்கு ஜோடியாக தேவி கதாபாத்திரத்தில் களம் இறங்கியுள்ள அறிமுக நடிகையின் டிக் டாக் வீடியோக்கள் இணையத்தின் அதி வைரல்.
Advertisment
மாயனாக நடிக்கும் செந்தில் பற்றி கேட்கவே வேண்டாம். தேவியின் ஆசையை நிறைவேற்ற தனது மாமியார் மற்றும் தேவியின் மாமாவிடம் பாச மழையை பொழிந்துக் கொண்டிருக்கும் மாயனுக்கு இன்று மிகப் பெரிய சர்ப்பிரைஸ்.
தேவியை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்ட காரணத்தால் மாயனை வீட்டில் யாருக்குமே பிடிக்காது. ஆரம்பத்தில் தேவியும் டாக்டர் அரவிந்தனை திருமணம் செய்துக் கொள்ள விருப்பப்பட்டு கடைசியில் மாயனை கரம் பிடித்தார். ஆனாலும் மாயனின் குணம் பிடித்து போக தேவியும் இப்போது மாயனிடம் நெருக்கம் காட்ட தொடங்கிவிட்டார். இந்நிலையில் இன்றைய ப்ரோமில் பிடிக்காத மருமகனுக்கு சாப்பாடு பரிமாறி ஆம்லெட்டும் போட ரெடியாகிவிட்டார் தேவி அம்மா. ஒட்டு மொத்த குடும்பமும் ஆச்சரியத்தில் வாயடைக்கிறது.
Azhagu promo:
சுதாவை கொலை செய்ய முயற்சித்து ஜெயிலில் இருக்கும் பூர்ணாவை நேரில் சென்று திட்டி தீர்க்கிறார் கர்ணா. தனது மனைவி பூர்ணா தான் முக்கியம் என்பதை அம்மாவிடம் வெளிப்படுத்தி பாசத்தையும் ஒருபக்கம் கொட்டுகிறார்.
அழகுக்கு செல்லமருமகள் சுதா தான் என்பது வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ஆனாலும் பூர்ணா மீது அன்பு காட்டவும் அழகு மறந்ததில்லை. இந்நிலையில், சுதாவை கொலை செய்யவே பூர்ணா துணிந்து விட்டதால் இப்போது பூர்ணா சிறை வாசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். சொந்த அக்கா என்ற உண்மை தெரிந்த பின்பு பூர்ணா இந்த முடிவை எடுத்தது தான் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் காரணம். மனைவி பக்கமும் செல்ல முடியாமல் குடும்பத்தையும் பகைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார் கர்ணா.