விஜய் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நிலையில், மீண்டும் தளபதி விஜய் - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் அடுத்த திரைப்படம் ‘தளபதி 65’ பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நிலையில், மீண்டும் தளபதி விஜய் - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் அடுத்த திரைப்படம் ‘தளபதி 65’ பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
Advertisment
ரசிகர்களால் தளபதி என்று கொண்டாடப்படும் நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தயாரிப்பு பணிகள் எல்லாம் முடிவடைந்து திரையரங்குகளில் வெளியாவதற்காக தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் முதலில் அறிவிக்கப்பட்டபோது விஜய் நடிக்கும் 64வது திரைப்படம் என்பதால் தற்காலிகமாக ‘தளபதி 64’ என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகுதான், அந்த படத்திற்கு ‘மாஸ்டர்’ என்று பெயர் அறிவிக்கப்பட்டது.
Advertisment
Advertisement
அந்த வரிடையில், ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் அதே நேரத்தில், தளபதி விஜய் அடுத்து நடிக்கும் 65வது படமான ‘தளபதி 65’ படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று காத்திருக்கின்றனர்.
முதலில் விஜயின் தளபதி 65 திரைப்படம் விஜய் படத்தின் சீக்வெல்லாக இருக்கும் என்று ஊகங்கள் பேசப்பட்ட, நிலையில், விஜயின் அடுத்த படம் சீக்வெல் அல்ல முற்றிலும் புதிய படம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யை வைத்து இயக்கி துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என 3 வெற்றிப் படங்களை அளித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ திரைப்படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தளபதி 65 படம் விஜய் நடித்த படங்களின் சீக்வெல் அல்ல. முற்றிலும் புதிய திரைக்கதை என்று தெரிவித்துள்ளார்.
விஜயின் ‘தளபதி 65’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் சரியான நேரம் எதுவென்று கருதுகிறார்களோ அப்போது அறிவிப்பார்கள் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிதுள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதே நேரத்தில், தளபதி 65 படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளார். தமன் விஜய் படத்துக்கு முதல்முறையாக இசையமைக்கிறார்.
விஜயின் மாஸ்டர் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விஜயின் அடுத்த படமான தளபதி 65 பற்றிய தகவல் வெளியாகி உள்ளதால் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"