Advertisment

Thalapathy 68: பைக்கில் பறக்கும் டபுள் ஆக்க்ஷன் விஜய்... “The G.O.A.T” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்

Thalapathy 68 : வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படமான, The G.O.A.T படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
THE GOAT

The Greatest Of All Time second look poster

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Thalapathy 68 : வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படமான, The G.O.A.T படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கடந்த ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளியான வாரிசு, லியோ ஆகிய 2 திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தன. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்திர்கு தற்காலிகமாக தளபதி 68 என தற்காலிகமாக பெயரிடப்பட்டது. 

ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என டபுள் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இலங்கையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தளபதி 68 படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தளபதி 68 படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 31-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய் நடிக்கும் தளபதி 68 படத்துக்கு,  ‘The Greatest Of All Time’ - The G.O.A.T என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. விஜய் இந்த படத்தின் போஸ்டரில் அப்பா மற்றும் மகன் கதாபாத்திரத்தில் வரும் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 



இதைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு சர்பிரைஸ்-ஆக  ‘The G.O.A.T’ படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி, இரண்டாவது போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, விஜய் நடிக்கும் ‘The Greatest Of All Time’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் படம் வெளியாகி உள்ளது. செகண்ட் லுக் போஸ்டரில்,  ‘The Greatest Of All Time’ விஜய் டபுள் ஆக்‌ஷனில் அப்பா மற்றும் மகன் கதாபாத்திரங்களில் துப்பாக்கியில் ஃபயர் செய்தபடி பைக்கில் பறக்கும் காட்சி ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. 

விஜய்யின் ‘The Greatest Of All Time’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர், ஆக்‌ஷனுக்கு பஞ்சம் இல்லை என்று விஜய் ரசிகர்ளுக்கு சூசகமாக தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment