சூர்யா படத்தில் ஒப்பந்தமான விஜய்: வைரல் போட்டோ

Vijay – Laila – Surya : உன்னை நினைத்து படத்தில், விஜய், லைலா நடித்த காட்சிகள் தற்போது போட்டோக்களாக வைரல் ஆகிக்கொண்டிருக்கின்றன.

Vijay, thalapathy vijay, surya, Nerrukku ner, unnai ninaithu, laila, photos, viral,news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

நடிகர் சூர்யா அறிமுகம் ஆன நேருக்கு நேர் படத்தில், சூர்யா கேரக்டரில் முதலில் அஜித் தான் நடிக்க இருந்தது. பின் ஏதோ காரணத்தால், அவரால் நடிக்க இயலாமல் போனதால், சூர்யாவுக்கு அது முதல் படமாக மட்டுமல்லாது வெற்றிப்படமாகவும் அமைந்தது.

 

 

அதேபோல், பல படங்களில் முதலில் ஒப்புக்கொண்ட நடிகர் நடிக்காததால், தான் அப்படங்களில் நடித்ததாக, நடிகர் சூர்யாவே, ஒரு டிவி நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார்.

சூர்யா, லைலா நடிப்பில் பெரும்வெற்றி பெற்ற உன்னை நினைத்து திரைப்படம், சமீபத்தில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பானது. இதனிடையே, சில நாட்களாக, சூர்யா, லைலா இணைந்து நடித்த காட்சிகளில், சூர்யாவுக்கு பதிலாக விஜய் இருந்தவாறு போட்டோக்கள் வைரலாகி வந்தன. விசயம் என்னவென்று விசாரித்தபோதுதான் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

தளபதி விஜய்க்கு, ‘பூவே உனக்காக’ என்ற சூப்பர்ஹிட் படத்தை தந்தவர் இயக்குனர் விக்ரமன். இந்த கூட்டணி மீண்டும் இணைய முடிவெடுத்து துவங்கிய படம் தான் உன்னை நினைத்து. படத்தின் சூட்டிங் சில தினங்கள் நடைபெற்ற நிலையில், திடீரென்று படத்திலிருந்து விஜய் விலகுவதாக அறிவித்தார்.இதனையடுத்து, விஜய் நடிக்க இருந்த கேரக்டரில், சூர்யா நடித்தார். இந்த படம், சூர்யாவின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

 

உன்னை நினைத்து படத்தில், விஜய், லைலா நடித்த காட்சிகள் தற்போது போட்டோக்களாக வைரல் ஆகிக்கொண்டிருக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay thalapathy vijay surya nerrukku ner unnai ninaithu laila photos viral

Next Story
‘சீக்கிரம் மீண்டு வாங்க டியர் பாலு சார்’ – ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com