பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'The G.O.A.T' (‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படத்தின் புதிய போஸ்டர் படக்குழுவினரால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவா, மோகன், பிரசாந்த், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, பிரேம் ஜி ஆகியோர் நடிக்கின்றனர். நட்சத்திர பட்டாளமே படத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர்கள் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் கவச உடை அணிந்து கையில் துப்பாக்கி உடன் இருக்கின்றனர். இதை வைத்து ரசிகர்கள் படத்தின் கதை களத்தை யூகித்து வருகின்றனர். ராணுவ பின்னணி கொண்ட படமாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
மேலும் சிலர் இது வெட்கட் பிரபுவின் படமாக இருக்கும் என்றும் படத்தை காண ஆவலாக இருப்பதாகவும் கூறுகின்றனர். அதோடு இந்த பொங்கல் தளபதி பொங்கல், The G.O.A.T squad, வேற லெவல் போஸ்டர் என எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“