விஜய்யின் தி கோட் திரைப்படம் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள திரையரங்கில் காலை 10 மணி காட்சி திரையிடப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், விஜய் ரசிகர்கள் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இதனால், திரையரங்கில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
உலகம் முழுவதும் இன்று விஜய் நடித்த தி கோட் திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிற நிலையில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள திரையரங்கில் காலை 10 மணி காட்சியில் ரசிகர்கள் ஆரவாரத்தோடு உள்ளே நுழைந்து படம் தொடங்கிய நிலையில் இருபது நிமிடங்கள் ஆடியோ வராமல் வெறும் படம் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் கூச்சலும் குழப்பமும் எழுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்து படம் நிறுத்தப்பட்டு மீண்டும் முதலில் இருந்து தி.கோட் படம் திரையிடப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக திரைப்படம் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்
பீஸ்ட், லியோ படங்கள் வெளியான போதும் இதே திரையரங்கில் இப்பிரச்னை ஏற்பட்டதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்
3 வது முறையாக விஜய் படம் வெளியான போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறி ரசிகர்கள் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“