/indian-express-tamil/media/media_files/AYIQz84sF3sbdomEXFAc.jpg)
சின்ன சின்ன கண்கள் என்ற பாடலை விஜய் பாடியிருக்கிறார். ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலில் பதிவு செய்துள்ளனர்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் படத்தின், 2-வது பாடல் சிங்கிள் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. சின்ன சின்ன கண்கள் என்ற பாடலை விஜய் பாடியிருக்கிறார். ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலில் பதிவு செய்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் தி கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால், தி கோட் அவருடைய கடைசி படம் என்று கருதப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி கோட் படம் செப்டம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தி கோட் படத்தின் அப்டேட் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜூன் 22ம் தேதி, விஜய் தனது 50வது பிறந்தநாள் வந்துள்ளது.
இதனிடையே கள்ளக்குறிச்சி அருகே கள்ளச் சாராயம் அருந்தியதில் 52 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து, த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நலம் விசாரித்தார். மேலும், இன்று காலை தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விஜய்யின் 50வது பிறந்தநாளை வெறித்தனமாக கொண்டாட காத்திருந்த தவெக நிர்வாகிகள் தொண்டர்களுக்கு, இந்த உத்தரவு ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் அதே விஜய் ரசிகர்களுக்காக, தி கோட் படத்தின் 2வது பாடல் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.
A song which is very very close to our hearts will be yours tomorrow!!! Here is a chinna promo of a song with a big heart ♥️
— venkat prabhu (@vp_offl) June 21, 2024
Vocal by @actorvijay sir & #Bhavatharini 🎤
A @thisisysr magical 🎼
A @kabilanvai lyrical ✍🏼
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram… pic.twitter.com/QSVpYLG4Qo
யுவன்சங்கர் ராஜா இசையில் சின்ன சின்ன கண்கள் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இப்பாடல் எங்களுடைய இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்த பாடலை ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலில் பதிவு செய்துள்ளனர். அதே போல, இந்த பாடலில் விஜய்யும் பாடியிருக்கிறார்.
தனது பிறந்தநாளை கொண்டாட வேன்டாம் என்று கூறியுள்ள விஜய், தான் நடிக்கும் படத்தின் ப்ரோமோஷனுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்துள்ளார்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், தளபதி 50, தி கோட் என்ற ஹேஷ்டேக்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தி கோட் திரைப்படம் விஜய்யின் கடைசி படமாக இருக்கலாம் என்று கூறப்பட்டாலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால், அதற்கு இடையில் விஜய் இன்னும் ஒரு படம் நடிக்க வாய்ப்பு இருக்கலாம் என்று பேசப்படுகிறது. அதனால், விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது 69வது படம் குறித்தும் அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். விஜய்யின் தளபதி 69 படத்தை ஹெச் வினோத் இயக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.