விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா? 20 ஆண்டுகளுக்கு முன்பே பதில் சொன்ன ரஜினி; வீடியோ

“சூப்பர் ஸ்டார் என்பது கமிஷனர், ஐஜி, டிஐஜி, முதல்வர் அல்லது பிரதமர் போன்ற பதவிகளைப் போன்றது” – நடிகர் ரஜினிகாந்த்.

Vijay the next Rajinikanth? Superstar answer 20 years ago tamil news
Rajinikanth has held the top position in Tamil cinema for over 40 years now.

தமிழ் சினிமாவின் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கேள்வி பல தமிழ் செய்தி சேனல்களிலும், சமூக ஊடக தளங்களிலும் பரபரப்பாக பேசப்படும் தலைப்பாகவும், விவாதிக்கப்படும் ஒரே விஷயமாகவும் உள்ளது. சூப்பர் ஸ்டார் என்ற பெரும் அந்தஸ்த்தில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் நிலையில், தற்போது அடுத்த ரஜினிகாந்த் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று கருதப்படும் முன்னணி நடிகர்களில் விஜய் மற்றும் அஜித்குமார் உள்ளனர்.

“சூப்பர் ஸ்டார் நடிகர்” விவாதம் பல வருடங்களாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜுஅஜித்தை விட விஜய் பெரிய நட்சத்திரம் என்று கூறியிருந்தார். இது ஏற்கனவே கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் டன் கணக்கில் எண்ணெயை ஊற்றிய கதையாயிற்று. இதனால், விவாதமும் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. அப்படியென்றால், ரஜினிகாந்தை விட விஜய் பெரியவரா?

இந்த விவகாரம் பற்றி தெரியாதவர்களுக்கு, அடுத்த சூப்பர் ஸ்டாருக்கான போட்டி 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது என்பது தான். தமிழ்நாட்டில் சூப்பர்ஸ்டார் என்பது ரஜினிகாந் என்ற பெயருக்கு இணையான சொல் ஆகும். மற்ற பிரபல நட்சத்திரங்களைக் குறிப்பிடும் போது கவனமாகக் கருத்தில் கொள்ளாமல் பயன்படுத்த கூடிய வார்த்தை அல்ல அது. மார்க்கெட் வல்லுநர்களால் அந்த இடத்திற்கான சரியான நடிகரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த 2002ல் வெளிவந்த பாபா படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தபோது, ​​பலர் ரஜினிகாந்தின் திரைப்பயணம் அவ்வளவு தான் “முடிந்தது’ என்பது போல் பக்கம் பக்கமாக எழுதித் தீர்த்தனர். மேலும், அது அவரது பாக்ஸ் ஆபிஸ் மேலாதிக்கத்தின் முடிவாகவும் கூறப்பட்டது. இதனால் அடுத்த ரஜினிகாந்த்தை தேடும் பணியும் தொடங்கியது. ஆனால், இன்றும், அவர் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு, இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களை (எந்திரன், கபாலி, 2.0) வழங்கியவராக, 72 வயதிலும் தனக்கே உரித்தான ஸ்டைலில் வீர நடை போட்டு வருகிறார்.

உதாரணமாக, 2018 மற்றும் 2019 இடைப்பட்ட காலத்தில் சுமார் ஏழு மாதங்களில், ரஜினிகாந்தின் மூன்று படங்களும் உலகளாவிய டிக்கெட் விற்பனையில் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளன.

ரஜினிகாந்தின் அந்த இடத்தை விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களில் யாராலும் பிடிக்க முடியாது என்று நீண்ட நாட்களாக கூறி வருகின்றனர். இதற்கு விவாதம் இல்லாமல் அனைவருமே உடன்படுவார்கள். பொழுதுபோக்குத் துறையிலும் இந்திய சினிமாவின் உலக வளர்ச்சியிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நட்சத்திரங்களில் பாக்ஸ் ஆபிஸில் வணிகரீதியான ரியல் எஸ்டேட்டை யார் ஆக்கிரமித்துள்ளனர் என்பதுதான் முழு விவாதமும். ஆனால், விவாதம் திசைமாறி வேறு திசையில் நகர்ந்து வருகிறது.

ரஜினிகாந்தே தனது ‘சூப்பர் ஸ்டார்’ பதவியை அதிகம் விரும்பாதவர். அவர் அதைப் பாராட்டுகிறார் மற்றும் அவரால் முடிந்தவரை அதை அனுபவிக்கிறார். ஆனால், அவர் அதை என்றென்றும் வைத்திருக்க விரும்பவில்லை. இதை அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவான வார்த்தைகளில் கூறியிருந்தார்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2003 ம் ஆண்டில் வெளியாகிய சாமி படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது விக்ரமின் நடிப்பையும், இயக்குநர் ஹரியின் திறமையையும் கண்டு வியந்து பேசினார் ரஜினிகாந்த். மேலும் அவர் படக் குழுவினருக்கு பாராட்டு மழையும் பொழிந்தார். பாபா படத்தின் தோல்விக்குப் பிறகு, ரஜினிகாந்த் எந்தப் புதிய படத்திலும் ஒப்பந்தம் செய்யவில்லை. “நானும் அதையே செய்வதில் சலித்துவிட்டேன். எனக்கு விருப்பமான பாடம் கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன்” என்று அந்த நிகழ்வில் கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், சூர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல அந்த இளைய நட்சத்திர நடிகர்களுக்கு சில டிப்ஸ்களை பகிர்ந்து கொண்டார்.

அடுத்த ரஜினிகாந்த் யார்? – ரஜினிகாந்த்தின் உரை பின்வருமாறு:-

“சூப்பர் ஸ்டார் என்பது கமிஷனர், ஐஜி, டிஐஜி, முதல்வர் அல்லது பிரதமர் போன்ற பதவிகளைப் போன்றது. சூப்பர் ஸ்டார் என்பது மற்றொரு பொசிஷன் போன்றது. அது காலப்போக்கில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் போய்க்கொண்டே இருக்கிறது. அந்த இடத்தில் இருப்பவர் ஓய்வு பெறுவார், ஆனால் அந்த பதவி அப்படியே இருக்கும்.

லாங் லிவ் கிங் என்கிறார்கள். ஆனால், அந்த ராஜா (கிங்) இறந்தால், ஒரு புதிய ராஜா (கிங்) வருவார். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், பல வெற்றிப்படங்களைத் தரும் நடிகர், யாருடைய படங்கள் அதிக லாபம் ஈட்டுகின்றனவோ, அதிக ரசிகர்களைக் கொண்டவையாக இருக்கின்றன, யாருடைய படங்கள் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லையோ அவர்தான் சூப்பர் ஸ்டார்.

ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள், என் காலம் முடியும் வரை நான் அதைச் செய்வேன் (நடிப்பேன்) என்று எதிர்பார்க்காதீர்கள். எந்தத் தொழிலாக இருந்தாலும், முதல் பாதி கடின உழைப்பு, பணம், புகழ் மற்றும் நற்பெயரை உருவாக்குவது, இரண்டாவது பாதி நாம் சம்பாதித்த அனைத்தையும் பாதுகாப்பது. எனவே ஞானமுள்ளவன் எல்லாவற்றையும் காக்க முயல மாட்டான். சிலரை விடுவிப்பார். புகழ் என்பது மணலில் கோட்டை கட்டுவது போன்றது. நீங்கள் அதை உருவாக்க முடியும், ஆனால் எவ்வளவு காலம் பாதுகாப்பீர்கள்? அதைப் பாதுகாக்க நீங்கள் ஆட்களை வைத்திருக்கலாம் ஆனால் காற்று அல்லது மழைக்கு எதிராக அதை எவ்வாறு பாதுகாப்பீர்கள்?

நான் செய்ததைச் சொல்கிறேன். நான் அங்கும் இங்கும் பார்க்கவில்லை. எனது கவனத்தை சிதறடித்து கொள்ளாமல் என் பாதையில் நடக்கிறேன். எனக்கு நண்பனும் நான்தான். எதிரியும் நாந்தான். நான் எனது சொந்த படங்களோடு போட்டியிடுகிறேன், மற்ற படங்களுக்கு எதிராக நான் போட்டியிடுவதில்லை. இப்போ எனக்குப் போட்டி படையப்பா. அடுத்து படையப்பாவை விட பெரிய ஹிட் கொடுக்கணும். விக்ரமுக்கு போட்டி சாமி. சூர்யாவின் போட்டி காக்கா காக்கா. விஜய்யின் போட்டி ஃப்ரண்ட்ஸ் அல்லது காதலுக்கு மரியதை. அந்த வழியை தொடர்ந்து பின்பற்றினால், நீங்களும் வளர்ந்து இயற்கையாக ஒரு இடத்தை அடைவீர்கள்.

இரண்டாவது விஷயம், நிறைய ஆசைகள் வேண்டாம் மற்றும் நிறைய பேரை (உங்கள் உள் வட்டத்தில்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.”)

YouTube video player

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay the next rajinikanth superstar answer 20 years ago tamil news

Exit mobile version