scorecardresearch

மனோபாலா மகன் கையைப் பிடித்து… உருக்கமாக அஞ்சலி செலுத்திய விஜய்!

நடிகர் மனோ பாலா உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது, மனோ பாலா மகனின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார்.

Actor Vijay paid tribute to actor Mano Bala
நடிகர் மனோ பாலா உடலுக்கு நடிகர் விஜய் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நடிகர் மனோ பாலா உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (மே 3) காலமானார். அவருக்கு வயது 69.
மனோ பாலாவின் மரணம் திரைத் துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது உடலுக்கு திரை உலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, மனோபாலாவின் மகனின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார்.
மனோ பாலாவின் மரணத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்தியராஜ், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி., இயக்குனர் ஹெச். வினோத் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்தின், “ஊர்க் காவலன்” படத்தை இயக்கியவர் மனோ பாலா ஆவார். சினிமாத் துறையில் தன்னை உயிர்ப்புடன் வைத்திருந்த மனோ பாலா, பின்னாள்களில் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
சின்ன சின்ன வேடங்களில் கூட முத்திரை பதித்தார். அண்மையில் வெளியான அரண்மனை உள்ளிட்ட படங்களிலும் தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் மக்களை கவர்ந்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tribute to actor mano bala