/tamil-ie/media/media_files/uploads/2019/09/Sreethu-Nair-Photos.jpg)
Sreethu Nair Photos, Vijay TV Aayutha Ezhuthu Serial
Sreethu Nair Latest Photos: சின்னத்திரைகளில் சின்ன சின்ன ரோல்களில் அறிமுகமாகுபவர்களுக்கு, அவர்களின் நடிப்புத் திறனைப் பொறுத்து அடுத்தடுத்த சீரியல்களில் அழுத்தமான கேரக்டர் கிடைக்கும். முதல் சீரியல்களில் சின்னதாக தலைக்காட்டியவர்களுக்கு அடுத்த சீரியலில் லீட் கூட கிடைக்கும்.
அப்படி சின்னத்திரை மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டு, அடுத்து வெள்ளித்திரைக்கு தூண்டில் போடுவது தான் பெரும்பாலான சீரியல் ஆர்டிஸ்டுகளின் பழக்கம். அந்த வகையில் ’ஆயுத எழுத்து’ சீரியல் நடிகை ஸ்ரீத்து நாயரும் தனது வேலையை ஆரம்பித்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘7-சி’ என்ற சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீத்து, தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘ஆயுத எழுத்து’ சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார். கிராமத்துப் பின்னணியில் உருவாகி வரும் இந்த சீரியலில், சப் கலெக்டராக நடித்து வரும் இவருக்கு சினிமாவில் ஹீரோயின் ஆகனும் என்ற ஆசையும் வந்திருக்கிறது போல.
வித விதமாக ஃபோட்டோஷூட் நடத்தி அந்த படங்களை இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/Sreethu-Nair-Photos-3-1024x683.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/09/Sreethu-Nair-Photos-2-1024x683.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/09/Sreethu-Nair-Photos-1-1024x683.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/09/69665198_431475987716382_7899648709382730673_n-820x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/09/70125807_180674552973981_2841675686638248301_n-819x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/09/71028591_403988490309240_7759171506932473086_n-819x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/09/71780280_168743280946127_4138773936305409048_n-819x1024.jpg)
ஸ்ரீத்து பதிவிட்டிருக்கும் இந்தப் படங்களுக்கு தற்போது லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றன. தமிழ் சினிமாவுக்கும், கேரள நடிகைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால், விரைவில் ஸ்ரீத்துவும் அதன் அங்கமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.