Advertisment

'அபாண்டம்... பர்சனல் விஷயத்தை ஆதாரம் இல்லாமல் பேசாதீர்கள்!' எஸ்.கே-வுக்கு ஆதரவாக களம் இறங்கிய பிரபல சீரியல் நடிகர்

சாட்சிகள் இல்லை என்றால் மற்றவர்களைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை பேசவே செய்யாதீர்கள்; சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக சீரியல் நடிகர் தீபக் கருத்து

author-image
WebDesk
New Update
deepak and SK

சாட்சிகள் இல்லை என்றால் மற்றவர்களைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை பேசவே செய்யாதீர்கள்; சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக சீரியல் நடிகர் தீபக் கருத்து

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து இமான் கூறிய கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல சீரியல் நடிகர் தீபக் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித் திரையில் சாதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள சிவகார்த்திகேயன் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் டி.இமான் பேசிய வீடியோவால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதே நேரத்தில் இது உண்மையா? பொய்யா? என்ற குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இசையமைப்பாளர் இமான் அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயன் தன்னால் மன்னிக்கவே முடியாத ஒரு துரோகத்தை தனக்கு செய்ததாகவும், தனது குழந்தையின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு அதை வெளியே கூற முடியாது என்றும் கூறியிருந்தார். இதற்கு ரசிகர்கள் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி இதனை ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு சிலர் இமானுக்கு ஆறுதலாகவும் பேசி வருகின்றனர். ஆனால், இது பற்றி சிவகார்த்திகேயன் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பிரபல சீரியல் நடிகர் தீபக் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ”சிவகார்த்திகேயன் அப்படிப்பட்டவர் இல்லை. மேலும் இன்னொருவர் வாழ்வில் நடந்த எந்த ஒரு விஷயத்திற்கும் சாட்சி இல்லாமல் நாம் நம்ப கூடாது. அப்படி சாட்சிகள் இல்லை என்றால் மற்றவர்களைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை பேசவே செய்யாதீர்கள்” என்று தீபக் தெரிவித்துள்ளார்.

தென்றல் உள்ளிட்ட பல்வேறு சீரியல்கள் மூலம் பிரபலமான தீபக், தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். தீபக் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சியின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கமானவர். ஆரம்ப கட்டத்தில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி இவரும் ஒரு காரணமாகத்தான் இருந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Siva Karthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment