என்ன ஒரு கொண்டாட்டம்… மனைவி வளைகாப்பில் நிஷாவுடன் டான்ஸ் ஆடிய விஜய் டிவி நடிகர்!

பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட வளைகாப்பு விழாவில் நடிகர் வினோத் பாபு மேடையில் ஜாலியாக டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Vijay TV actor Vinoth Babu, actor Vinoth Babu dance with Nisha, actor Vinoth Babu dance in his wife baby shower function, விஜய் டிவி, விஜய் டிவி நடிகர் வினோத் பாபு, நடிகர் வினோத் பாபு மனைவியின் வளைகாப்பு விழாவில் மாஸ் டான்ஸ், Sundari neeyum sundaran naanum serial, thendral vanthu enna thodum, vijay tv serial actor dance

விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நடிகர் வினோத் பாபு தனது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நகைச்சுவை கலைஞர் நிஷாவுடன் டான்ஸ் ஆடி கொண்டாடியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஜூலை, 2019ம் ஆண்டு முதல் மார்ச் 2020 வரை ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஹீரோவாக நடித்தவர் வினோத் பாபு, ஆரம்பத்தில் நடனக் கலைஞராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய அவருக்கு இந்த சீரியல் தான் அடையாளம் தந்தது. ரசிகர்களால் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் வினோத் பாபு என்று அழைக்கப்படுகிறார். இந்த சீரியல் முழுவதும் காதல், குடும்பம், அரசியல் என்று உருவாகியிருந்தது.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலை இயக்குனர் அப்துல் கபீஸ் இயக்கி இருந்தார். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி நடித்தனர். ஆனால், இந்த சீரியல் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மத்தியில் வெற்றி பெறவில்லை. அதனால், சீக்கிரமாகவே முடிக்கப்பட்டது.

இதையடுத்து நடிகர் வினோத் பாபு காமெடி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்தார். தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல், தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இந்த சீரியலின் புரோமோ வெளியாகி சர்ச்சையானது.

இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி மாதம் வினோத் பாபுவுக்கு சிந்துவுடன் திடீர் திருமணம் நடைபெற்றது. தற்போது அவருடைய மனைவி சிந்து கர்ப்பமாக இருக்கிறார். அண்மையில், அவருடைய மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிவி பிரபலங்கள் நிஷா, தாப்பா, நடிகை நளினி உள்ளிட்டோர் கொண்டுள்ளனர். பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட வளைகாப்பு விழாவில் நடிகர் வினோத் பாபு மேடையில் ஜாலியாக டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், விஜய் டிவி பிரபலம் நிஷாவுடன் டான்ஸ் ஆடியுள்ளார். வினோத் பாபு தனது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv actor vinoth babu dance with nisha his wife baby shower function

Next Story
இதுதான் வனிதா..! இந்த ஹியூமர் எத்தனை பேருக்கு வரும்?vanitha vijayakumar Tamil News: bb tamil vanitha shares meme
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express