என்னாச்சு விஜய் டிவி... 3 சீரியல்களில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்?

Vijay TV actors changes in these serials: விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் நடிகர்கள் மாற்றம்; யார் புதுசா வர்றதுனு பாருங்க!

Vijay TV actors changes in these serials: விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் நடிகர்கள் மாற்றம்; யார் புதுசா வர்றதுனு பாருங்க!

author-image
WebDesk
New Update
என்னாச்சு விஜய் டிவி... 3 சீரியல்களில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்?

விஜய் டிவியின் மூன்று முக்கிய சீரியல்களில் முக்கிய நடிகர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்று பெயர் பெற்ற விஜய் டிவி, சில ஆண்டுகளாக சீரியல்களிலும் முன்னிலையில் உள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தற்போது அதிக ரசிகர்களைக் கொண்ட சீரியல்கள் விஜய் டிவி சீரியல்களான உள்ளன. டிஆர்பி ரேட்டிங்கிலும் விஜய் டிவி சீரியல்களே டாப்பில் உள்ளன. இதில் விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர் மாற்றப்பட்டனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியலில் ஏற்கனவே கண்ணம்மாவின் அப்பா, அகிலன் என ஒரு சில கேரக்டர்களில் நடித்த நடிகர்கள் மாற்றப்பட்டு, அவர்களுக்கு பதில் வேறு ஒருவர் நடித்து வருகிறார்கள். வெண்பா கேரக்டரில் நடிக்கும் ஃபரினா நிஜத்தில் கர்ப்பமாக இருப்பதால் அவர் மாற்றப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் அந்த கேரக்டரில் சிறிது பிரேக்கிற்கு பிறகு தானே மீண்டும் நடிக்க உள்ளதாக ஃபரினா தெளிவுபடுத்தி விட்டார்.

Advertisment
Advertisements

publive-image

இந்நிலையில் முக்கிய கதாப்பாத்திரமான கண்ணம்மா கேரக்டரில் நடிக்கும் ரோஷினி ஹரிபிரியன், இந்த சீரியலில் இருந்து விலக போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக போவதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே ரோஷினி நடிக்கும் எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்றும், அதற்கு பிறகு புதிய நடிகை மாற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

publive-image

இதேப்போல் மற்றொரு முக்கிய சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு பதில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். அடுத்ததாக ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த தீபிகாவிற்கு பதிலாக சாய் காயத்ரி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் காவியாவை முல்லை கேரக்டரில் ஏற்க தயக்கம் காட்டிய ரசிகர்கள், பிறகு அவரது நடிப்பை ரசிக்க துவங்கி விட்டனர். இந்நிலையில் முல்லை கேரக்டர் மீண்டும் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் கவின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள ஊர்க்குருவி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க காவியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால். விரைவில் காவியா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக போவதாக கூறப்படுகிறது. அவருக்கு பதில் தர்ஷா குப்தா, முல்லை கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்னொரு புதிய மாற்றமாக பிக்பாஸ் ரியோ ராஜ் நடிக்க போகிறாராம். இதை மூர்த்தி கேரக்டரில் நடிக்கும் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். ஆனால் ரியோ, கெஸ்ட் கேரக்டரில் நடிக்க போகிறாரா அல்லது வேறு ஏதாவது கேரக்டர் மாற்றம் செய்யப்பட உள்ளதா என தெரியவில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு சீரியலான காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோவாக நடிக்கும் தர்ஷனுக்கும் சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதால், அவர் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தர்ஷன் நடிக்கும் ஹீரோ சூர்யாவின் கேரக்டரில் இனி நடிகர் சுவாமிநாதன் நடிக்க இருக்கிறார்.

இப்படி விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் நடிகர்கள் மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Pandian Stores Serial Barathi Kannamma Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: