'என்னை ஆன்ட்டி என அழைத்த மோட்டிவேஷன் ஸ்பீக்கர்' கொந்தளித்த விஜய் டிவி ஜாக்குலின்
Vijay TV actress Jacquline Lydia slams body shaming: உடல் அமைப்பையும் சிகை அலங்காரத்தையும் வைத்து கிண்டல் செய்பவர்களுக்கு ஜாக்லின் தக்க பதிலடி கொடுத்துள்ளார்
Vijay TV actress Jacquline Lydia slams body shaming: உடல் அமைப்பையும் சிகை அலங்காரத்தையும் வைத்து கிண்டல் செய்பவர்களுக்கு ஜாக்லின் தக்க பதிலடி கொடுத்துள்ளார்
பெண் தோழியின் சிகை அலங்காரத்தை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜாக்லின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisment
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளாராக அறிமுகமான ஜாக்லின், அந்நிகழ்ச்சியின் தொடர்ந்து மூன்று சீசன்களில் தொகுப்பாளராக பணிபுரிந்தார்.
தற்போது அதே விஜய் டிவியில் தேன்மொழி பி.ஏ என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஜாக்லின் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கச்சியாக நடித்தார். மேலும் சில படங்களில் சிறிய வேடங்களிலும் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஜாக்லின், சமீபத்தில் தன் பெண் தோழி ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் இருக்கும் அவரது தோழி, முடியை ஷார்ட் ஆக வெட்டியிருந்ததால், அவரை பையனா என சிலர் கமெண்டில் கேட்டு இருந்தார்கள். சிலர் ஜாக்லினை ஆன்ட்டி எனவும் கமெண்ட் செய்திருந்தார்கள். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜாக்லின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஏன்னா இந்த உலகத்துல நம்மள சுத்தி இத்தன நல்லவங்க இருங்காங்களா, ஒரு ஃபிரண்டோட ஒரு ஃபோட்டோ போட்டிருந்தேன், அதுல அவ அவளுக்கு புடிச்ச மாதிரி ஒரு ஷார்ட் முடி அவளோட காசுல வெட்டிருக்கா, அது உங்கள எந்த இடத்தில் தொந்தரவு பண்ணுதுனு தெரியல, அது உங்க தம்பியா? அண்ணனா? இவ்வளவு கேள்விகள் கேட்டிருந்திங்க.
அவங்க ஒரு பொண்ணு, ஒரு ஃபோட்டோகிராபர், நிறைய கமர்ஷியல்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க, இதுக்கு மேல அவங்கள பத்தி எதுவும் தெரியனுமா? அவங்க சம்பாதிச்ச காசுல அவங்க முடி வெட்டிருக்காங்க, அதுல நமக்கு என்ன கஷ்டம் இருக்கு? ஒரு பொண்ணு இப்படிதான் முடி வைக்கனும்னு சொல்ல நாம ஆள் கிடையாது. அதே மாதிரிதான் பையனுக்கும், அவங்களுக்கு புடிச்ச மாதிரி வச்சுக்கலாம். கொஞ்சம் அதிகமா நீளமா முடி வச்சிருந்த பையன பாத்து நீ என்ன பொண்ணா? அப்படினு கேட்குறீங்க. அவங்க இப்படி தான் முடி வைக்கனும் சொல்றதுக்கு அவசியம் கிடையாது.இப்படி தான் நான் இருப்பேன், கமெண்ட் பண்ணுவேன், இது ஒரு ஜோக் அப்படி நினைச்சீங்கனா தயதுசெய்து பண்ணிட்டு போங்க, அத பத்தி எனக்கு கவலை கிடையாது. இவ்வளவு ஜட்ஜ்மெண்டலா இருப்பீங்கனா அது உங்க இஷ்டம்.
கமெண்ட்ஸ்ல சில பேரு என்ன ஆன்ட்டினு சொல்லுவாங்க, நா அவங்கள கண்டுக்கிறதில்ல, சரி யாரு இது மாதிரி கமெண்ட் போடுறதுனு பார்த்தா ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கராம். உங்கள மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்னு காட்டிக்கிட்டு இந்த மாதிரி அசிங்கமா கமெண்ட் போடுறது, யாரையும் துன்புறுத்துறது பண்ணாதீங்க, அதத்தான் நா பண்ணுவேனா நீங்க பண்ணுங்க, நா அதை கண்டுக்க மாட்டேன். உடல் அமைப்ப கிண்டல் பண்றவங்கள பத்தி நா எதுவும் பேசமாட்டேன். என்று வீடியோவில் பேசியுள்ளார்.