கல்யாணம் பின்னே; கொண்டாட்டம் முன்னே… விஜய் டி.வி நடிகையின் ப்ரீ வெட்டிங் வீடியோ

Vijay TV actress Nakshathra Nagesh pre wedding celebrations photos: விரைவில் திருமணம்; சின்னத்திரை நடிகை நக்‌ஷத்ராவின் ப்ரீ வெட்டிங் புகைப்படங்கள்

விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் சின்னத்திரை நடிகை நக்‌ஷத்ராவின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நட்சத்திரா. இந்த சீரியலில் பிரபல சீரியல் நடிகர் தீபக் நாயகனாக நடித்து வருகிறார். தீபக் தமிழ் என்ற கேரக்டரிலும், நக்‌ஷத்ரா சரஸ்வதி என்ற கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.

பிரபல டிவி தொகுப்பாளரும், சீரியல் நடிகையுமான நக்‌ஷத்ரா நாகேஷ், தனது திறமையான பேச்சு மற்றும் நடிப்பால் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். நக்‌ஷத்ரா முதன் முதலில் தந்தி டிவியில் ஒளிப்பரப்பான வானவில் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் ஜோடி நம்பர் 1, சன் சிங்கர், சன் குடும்ப விருதுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

தொகுப்பாளராக மட்டுமில்லாமல் நக்‌ஷதரா வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, திருமகள், நாயகி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சேட்டை, வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் நக்‌ஷத்ரா நடித்துள்ளார்.

சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பிரபலமாக இருக்கும் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். வெகு விரைவில் தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடிக்க உள்ளார். கடந்த ஜனவரியில் காதலர் ராகவ் என்பவருடன் நக்‌ஷத்ராவுக்கு ஆடம்பரமான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை காரணமாக திருமணம் தள்ளிப்போனது. இதுகுறித்து நக்‌ஷத்ரா சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் தனது திருமணம் விரைவில் நடக்க உள்ளதை நக்‌ஷத்ரா சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். நக்‌ஷத்ரா- ராகவ் ஜோடி தங்களது திருமணத்தை மிகவும் மகிழ்ச்சியான தருணமாக மாற்ற ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். திருமணத்திற்கு முன்பு நடத்தப்படும் சங்கீத் என்ற ஃபங்ஷனில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் போட்டோக்களை நக்‌ஷத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என் மகிழ்ச்சியான வாழ்க்கையின் ஆரம்பம், உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசிர்வாதத்துடனும், ராகவ்வும் நானும் எங்கள் திருமண விழாக்களை ஆரம்பிப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். எங்கள் சங்கீத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு ஒரு எளிய இரவு உணவாக இருக்க வேண்டும் என்பது ஒரு மாயாஜால விசித்திரக் கதை மாலைக்குக் குறைவானது அல்ல, எங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் எனது ஆச்சரியத்திற்கும் நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, Get ready for Gettimelam என கேப்ஷன் கொடுத்து தனது நலங்கு நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv actress nakshathra nagesh pre wedding celebrations photos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com