scorecardresearch

வயிற்றில் குழந்தையுடன் தலைகீழாக நின்று யோகா: விஜய் டி.வி நடிகை பகீர் வீடியோ

கர்ப்பமாக இருக்கும் நிலையில் தலைகீழாக நின்றபடி யோகா செய்த பூஜா ராமச்சந்திரன்; பயிற்சியாளர் இருந்தாலும் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி தலைகீழாக நிற்கலாமா என்று நெட்டிசன்கள் பதறி வருகின்றனர்

வயிற்றில் குழந்தையுடன் தலைகீழாக நின்று யோகா: விஜய் டி.வி நடிகை பகீர் வீடியோ

நடிகை பூஜா ராமச்சந்திரன் வயிற்றில் குழந்தையுடன் தலைகீழாக நின்று யோகா செய்யும் வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

SS மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை துவங்கியவர் பூஜா ராமச்சந்திரன். அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்த பூஜா ராமச்சந்திரன், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘காஞ்சனா’ என்ற சீரியலில் நாயகியாக நடித்தார்.

இதையும் படியுங்கள்: ‘துணிவு இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை’: திடீரென டிரெண்ட் ஆகும் கருணாநிதி ட்வீட்

பின்னர் தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, நண்பேன்டா, காஞ்சனா 2, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், களம் உள்ளிட்ட படங்களிலும் பூஜா நடித்துள்ளார்.

இதனிடையே கடந்த 2010ல் பூஜா ராமச்சந்திரன், SS மியூசிக் சேனலில் வி.ஜே.,வாக இருந்த கிரேக்கை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2017ல் இருவருக்கும் விவகாரத்து ஆன நிலையில், நடிகர் ஜான் கொக்கனை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வேம்புலியாக நடித்து மிரட்டியவர் தான் இந்த ஜான் கொக்கன். இவர் சார்பட்டா படத்திற்கு முன்பே அஜித்தின் வீரம், பாகுபலி, கே.ஜி.எஃப் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வரும் 11ஆம் தேதி வெளியாகும் அஜித்தின் துணிவு படத்திலும், கேப்டன் மில்லர் படத்திலும் ஜான் கொக்கன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா மற்றும் ஜான் இருவரும் போலீஸ் ஸ்டோரி என்ற வெப் தொடரில் ஒன்றாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை பூஜா ராமச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தலைகீழாக நின்றபடி யோகா செய்கிறார். அதில் “மை லிட்டில் ஒன்” உன்னை சந்திப்பதற்காக தயாராக உள்ளேன் என்று கூறியிருந்தார். மேலும் பயிற்சியாளர் பக்கத்தில் வைத்துக்கொண்டே இந்த யோகாவை செய்ததாக கூறி, பயிற்சியாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த வீடியோ பதிவு வைரலாகவே பயிற்சியாளர் இருந்தாலும் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி தலைகீழாக நிற்கலாமா என்று நெட்டிசன்கள் பதறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv actress pooja ramachandran prenatal yoga video goes viral