/indian-express-tamil/media/media_files/U7BnOlRqUCCbp6gOmuZG.jpg)
பிரகதி (புகைப்படம் - ஃபேஸ்புக்)
குணச்சித்திர நடிகை பிரகதி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளதற்கு, அவர் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. தமிழில் சில படங்களில் அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு, மலையாளப் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பிரகதி நடித்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் பிரகதி நடித்திருக்கிறார்.
தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனை கிளி சீரியலில் மாமியாராக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து அம்மா கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் பிரகதி, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். அடிக்கடி போட்டோக்கள் பகிர்வது, ஹிட் பாட்டுக்கு ஆட்டம் போடுவது என இணையத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.
பிரகதி தன்னுடைய இருபதாவது வயதில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதையடுத்து, தனி ஒருத்தியாக போராடி இன்று இரு மகன்களையும் நன்றாக படிக்க வைத்துள்ளார்.
இந்நிலையில், டோலிவுட் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை பிரகதி காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் தெலுங்கு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இந்த செய்தியால், கடுப்பான பிரகதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதாரம் இல்லாமல் செய்தி வெளியிட்ட தெலுங்கு தொலைக்காட்சியை காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், நடிகை என்பதற்காக ஏதாவது பேசலாமா என்றும் அந்த தொலைக்காட்சியை வன்மையாக கண்டித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.