விஜய் டிவியில் விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார் என்று பார்வையாளர்கள் இடையே எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், விஜய் டிவி நடிகைகள் தங்களை குவாரண்டைன் செய்துகொண்டுள்ளதால் அவர்கள் 2 பேரும் பிக் பாஸ் வீட்டுக்கு செல்வது உறுதியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்கள் முடிவடைந்து 4வது சீசன் அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் 4 சீசன் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மிகவும் ஸ்டையலாக பேசும் நிகழ்ச்சி புரோமோ வெளியாகி பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்குச் செல்ல உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்ற யூகங்களும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பிக்பாஸ் போட்டியாளர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக தகவல் வெளியானதால், நிகழ்ச்சி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் அதில் சந்தேகமே இல்லை என்று உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், பிக் பாச் நிகழ்ச்சிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பகல் நிலவு சீரியலில் நடிக்கும் ஷிவானியும் ரம்யா பாண்டியனும் பிக் பாஸ் வீட்டுக்கு செல்வது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும் போட்டியாளர்களின் பட்டியலில் முதலில் இருந்து ரம்யா பாண்டியன், ஷிவானி பெயர்கள் பேசப்பட்டது. ஷிவானி பகல் நிலவு சீரியலில் இருந்து விலகியபோது அவர் பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல உள்ளதாக கூறப்பட்டது.
பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்வதற்காக ரம்யா பாண்டியனும், ஷிவானியும் அவர்கள் தங்களுடைய வீடுகளீல் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். நடிகைகள் இவரும் தங்களை குவாரண்டைன் செய்துகொண்டுள்ளதால் இவர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல உள்ளது மேலும் உறுதியாகி உள்ளது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 100 நாட்களுக்கு பதிலாக 80 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், 16 போட்டியாளர்களுக்கு பதிலால 12 போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.