விஜய் டிவிக்கு திரும்பும் வைரல் நடிகை: எந்த சீரியல்னு சொல்லுங்கப்பா!

Vijay Tv Actress Sharanya Turadi come back in Serial Viral Photo Tamil News என்ன சீரியலாக இருக்கும் என்கிற விவாதங்களில் தீவிரமாக டிஸ்கஸ் இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

Vijay Tv Actress Sharanya Turadi come back in Serial Viral Photo Tamil News
Vijay Tv Actress Sharanya Turadi come back in Serial Viral Photo Tamil News

Vijay Tv Actress Saranya Turadi come back in Serial Viral Photo Tamil News : செய்தி வாசிப்பாளராக தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் சரண்யா துராடி. அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து, ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். சில காலம், எந்தவித சீரியல்களிலும் காணப்படாத சரண்யா, தற்போது மீண்டும் ஒரு தொடர் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார்.

தன்னுடைய செய்தி வாசிப்பு மூலம் பல இளைஞர்களை செய்தி சேனல் பக்கம் திரும்ப வைத்தவர் சரண்யா துராடி. பிறகு இவரை சீரியலில் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழையைப் பொழிந்தனர். ஆனால், ஆயுத எழுத்து தொடரை அடுத்து சமீப காலமாக எந்த சீரியலிலும் காணமுடியாத இவரை, ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்தனர். ஆனால், மீண்டும் சின்னதிரையில் வேறு பரிமாணத்தில் களமிறங்கப் போகிற இவரை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.

என்ன சீரியல், யாருடன் இணைந்து நடிக்கப் போகிறார் என்பதைப் பற்றியெல்லாம்  கண்டுகொள்ளாமல், ‘நீங்கள் வந்தாலே போதும்’ என்று இவரைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர் இவருடைய ரசிகர்கள். ஆம், சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில் சரண்யா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்துத்தான் ரசிகர்கள் இவரைக் கொண்டாடி வருகின்றனர்.

சின்னத்திரையில் சரண்யாவைக் காண முடியவில்லை என்றாலும், தன்னுடைய தனிப்பட்ட யூடியூப் சேனல் வழியே, விதவிதமான காணொளிகளைப் பதிவு செய்து மக்களை சந்தித்து வந்தார். விதவிதமான போட்டோஷூட் செய்து, பல்வேறு விதமான புகைப்படங்களையும் அப்லோட் செய்து வந்தார். அதுமட்டுமின்றி, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு வழிகளில் உதவிகளும் செய்து வந்தார்.

இந்நிலையில்தான், மீண்டும் எப்போது சின்னத்திரைக்கு வருவீர்கள் என்று காத்துக்கொண்டிருந்த மக்களுக்கு, தன்னுடைய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் மூலம் பதிலளித்திருக்கிறார். ஆனால், மீண்டும் விஜய் டிவி தொடர் என்பது மட்டுமே இப்போதைக்கு வெளிவந்திருக்கும் தகவல். மற்றபடி சீரியலின் பெயர் என்ன என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். என்றாலும், என்ன சீரியலாக இருக்கும் என்கிற விவாதங்களில் தீவிரமாக டிஸ்கஸ் இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv actress sharanya turadi come back in serial viral photo tamil news

Next Story
ஹிட் சீரியலில் வில்லி நடிகை திடீர் மாற்றம்: புதிதாக வரும் விஜே மகாலட்சுமி கலக்குவாரா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X