கல்யாணம் முடிந்த கையோடு ஆச்சி விளம்பரம்.. ராசியான தம்பதிகளான ராஜா -ராணி ஜோடி!

இந்த ஜோடிகளை சேர்ந்து திரையில் பார்க்கலாம் என ஏங்கி போய் இருந்த ரசிகர்களுக்கு விருந்தாக இருவரும் திருமணம்

By: Updated: October 8, 2019, 01:08:08 PM

vijay tv alaya manasa sanjeev : சினிமா ஜோடிகளுக்கு நிகராக பேசப்பட்ட டெலிவிஷன் ஜோடி சஞ்சீவ்- ஆல்யா மானஸா. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எந்த பக்கம் திரும்பினாலும் இந்த ஜோடியின் ஃபோட்டோஸ், வீடியோக்கள் தான். அதுமட்டுமில்லை டிக் டாக்கில் இவர்கள் பதிவிடும் ரொமான்ஸ் வீடியோக்களை பார்த்தே வெறியான சிங்கிள்ஸ் ஏராளம்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி சச்சை போடு போட்ட ராஜா ராணி சீரியல் மூலம் ஆல்யா மானஸா முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். ஆனால் சஞ்சீவ் ஏற்கனவே பெரிய திரையில் முகம் காட்டி ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஆல்யா- சஞ்சீவ் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். இவர்களின் ஜோடி பொருத்தம் சூப்பர் என்று பலபேர் பலவிதமாக கொளுத்தி போட்டாலும் இவர்கள் மிகவும் தெளிவாகவே பேட்டி அளித்து வந்தனர்.

இதற்கிடையில் ஆல்யா மானஸா ஏற்கனவே தன்னுடன் இணைந்து நடனமாடிய நடன கலைஞரை காதலித்து வந்தார். இவர்களின் டான்ஸ் வீடியோக்களை யூடியூப்பில் தேடினால் பார்க்கலாம். கடைசியில் பல காரணங்களால் இருவருக்கும் இடையில் பிரேக் அப் ஏற்பட ஆல்யா- சஞ்சீவ் ஜோடி நெருக்கமானது.

மொத்த யூடிப்பிலும் இவர்களின் காதல் வீடியோக்கள் தான். இந்த ஜோடியின் காதல் ரகசியமாக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கல்யாணத்தில் முடிந்தது. இருவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து சிம்பிளாக ரிஷப்னையும் முடித்து விட்டனர்.

அவ்வளவு தான் ஆல்யா இனி சின்னத்திரயில் நடிக்க மாட்டார். அவரை நடிக்க சஞ்சீவ் அனுமதிக்க மாட்டார் என்றெல்லாம் அடுத்த வதந்திகள் வெளியாக தொடங்கினர். இதற்கு ஆம் சொல்லும் வகையில் அதே விஜய் டிவியில் சஞ்சீவியின் புதிய சீரியல் காற்றின் மொழி ப்ரமோ வெளியாகியது. அதிலும் புதுமுக நடிகை தான் மெயின் ரோல்.

 

View this post on Instagram

 

Happy to see Aachi masala ad on air ????????????????????????????????

A post shared by Alya Manasa (@alya_manasa) on

எப்படா இந்த ஜோடிகளை சேர்ந்து திரையில் பார்க்கலாம் என ஏங்கி போய் இருந்த ரசிகர்களுக்கு விருந்தாக இருவரும் திருமணம் முடிந்த கையோடு ஆச்சி மசாலா விளம்பரத்தில் அதே புதுமுக தம்பதிகளாக நடித்துள்ளனர். இந்த விளம்பரம் இப்போது எல்லா சேன்ல்களிலும் அதிகம் ஒளிப்பரப்பட்டு வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vijay tv alaya manasa sanjeev raja rani serial semba vijay tv raja rani serial alya manasa marriage hotstar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X